என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ENGvIND 5th test: ஜோ ரூட், ஹாரி புரூக் சதம்- நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 339/6
- இங்கிலாந்து வெற்றி பெற 374 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- இங்கிலாந்து நான்காம் நாள் முடிவில் 339 ரன்கள் எடுத்துள்ளது.
ஓவல்:
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து ஆடிய இங்கிலாந்து 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
23 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆடிய இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. பென் டக்கெட் அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட்டானார். ஒல்லி போப் 27 ரன்னில் வெளியேறினார்.
ஜோ ரூட் உடன் ஹாரி புரூக் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் சதம் கடந்தனர்.
4வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்த நிலையில் ஹாரி புரூக் 111 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 105 ரன்னில் வெளியேறினார்.
மழை காரணமாக ஆட்டம் சிறிது தடைபட்டது.
இறுதியில், நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றிபெற 35 ரன்கள் தேவை.
இந்தியா வெற்றிபெற 4 விக்கெட்டுகள் தேவை என்பதால் நாளை நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






