என் மலர்
விளையாட்டு
- கொனேரு ஹம்பி கால் இறுதியில் சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார்.
- இப்போட்டியில் ஹம்பி வெற்றி பெற்றார்.
பீடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கியது.
முதல் முறையாக கொனேரு ஹம்பி, வைஷாலி , திவ்யா, ஹரிகா ஆகிய 4 இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கொனேரு ஹம்பி கால் இறுதியில் சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டார். 53-வது நகர்த்தலின் போது யுக்சின் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதனால் ஹம்பி வெற்றி பெற்றார்.
இதனையடுத்து அவர் விளையாடிய 2 ஆவது காலிறுதி போட்டி டிராவில் முடிந்தது. இதன் காரணமாக மகளிர் செஸ் உலக கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஆந்திராவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி பெற்றார்
சென்னை கிராண்ட்மாஸ்டரான வைஷாலி சீன வீராங்கனையும், முன்னாள் சாம்பியனுமான டான் ஜோங்கியை சந்தித்தார். முதல் போட்டி 'டிரா' ஆனது. 2-வது போட்டியில் வைஷாலி தோல்வியை தழுவி வெளியேறினார்.
மற்றொரு கால் இறுதியில் இந்திய வீராங்கனைகளான ஹரிகா-திவ்யா தேஷ்முக் மோதினார்கள். முதல் போட்டி 'டிரா' ஆனது. 2-வது ஆட்டமும் 60-வது நகர்த்தலின் போது 'டிரா' வில் முடிந்தது. இருவரும் தலா 1 புள்ளியுடன் சம நிலையில் உள்ளனர். இன்று 'நடைபெறும் டை பிரேக்கரில் வெற்றி பெறும் வீராங்கனை அரை இறுதிக்கு முன்னேறுவார்.
இன்னொரு கால் இறுதி யில் லீடிங்பி (சீனா) 2-0 என்ற கணக்கில் டிஜாக் னிட்ஜியை (ஜார்ஜியா) தோற்கடித்தார். ஹம்பி அரை இறுதியில் லீடிங்சியை எதிர்கொள்கிறார்.
- மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.
மான்செஸ்டர்:
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி நேற்று ஜிம் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் முழங்காலில் காயம் அடைந்தார். ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் எஞ்சிய இரு ஆட்டங்களில் விளையாடுவது கடினம் தான். எனவே அவர் இந்தப் போட்டி தொடரில் இருந்து விலகுவார் என கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் நிதிஷ்குமார் ரெட்டியின் காயம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
- லார்ட்சில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றது.
- அடுத்த 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை இங்கிலாந்து நடத்துகிறது.
ஐ.சி.சி.யின் வருடாந்திர மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் 2027, 2029 மற்றும் 2031-ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் திறனை அங்கீகரிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்தது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தகது.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது.
- காயம் காரணமாக முன்னணி வீரர்கள் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது.
இந்நிலையில், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், நம்பர் 5 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் பிரிட்டனின் ஜாக் டிராபர் ஆகியோர் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.
காயம் காரணமாக கனடா ஓபன் தொடரில் விளையாடவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டில் கனடா ஓபன் டென்னிசில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இத்தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் ஜிம்பாப்வே தோல்வி கண்டது.
- இதனால் ஜிம்பாப்வே அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
ஹராரே:
ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்தது. பிரையன் பென்னட் 61 ரன்கள் அடித்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் கார்பின் போஷ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து, 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
ஆனால் கேப்டன் ரஸ்ஸி வான்டர் டுசென்-ரூபின் ஹெர்மன் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.
ஹெர்மன் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 17.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் அடித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வான் டர் டுசென் 52 ரன்னும், பிரெவிஸ் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்த தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி கண்ட ஜிம்பாப்வே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
- டாஸ் வென்ற வங்காளதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 110 ரன்னில் ஆல் அவுட்டானது.
டாக்கா:
பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.3 ஓவரில் 110 ரன்களுக்கு சுருண்டது. தொடக்க ஆட்டக்காரர் பகத் சமான் 44 ரன்னும், அப்பாஸ் அப்ரிடி 22 ரன்னும் எடுத்தனர்.
வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பர்வேஸ் ஹொசைன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து வெற்றிக்கு உறுதுணையாக நின்றார். தவ்ஹித் ஹிருடோய் 36 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், வங்காளதேசம் 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரில் வங்காளதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது பர்வேஸ் ஹொசைனுக்கு வழங்கப்பட்டது.
- சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீரர் பப்ளிக் சாம்பியன் பட்டம் வென்றார்.
சுவிஸ்:
சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இதில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக், அர்ஜென்டினா வீரர் ஜுவான் மேனுவல் செருண்டலோ உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-4 என பப்ளிக் வென்றார். 2வது செட்டை 6-4 என அர்ஜெண்டினா வீரர் கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-3 என வென்ற பப்ளிக் சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.
- மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து க்ளப் வீரர்களை இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்துள்ளனர்.
- அப்போது 2 அணி வீரர்களும் பரஸ்பரம் தங்களது ஜெர்ஸிகளை மாற்றி புகைப்படம் எடுத்து கொண்டனர்.
இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து க்ளப் வீரர்களை இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்துள்ளனர்.
அப்போது 2 அணி வீரர்களும் பரஸ்பரம் தங்களது ஜெர்ஸிகளை மாற்றி புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
- ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.
- ஒட்டுமொத்தமாக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ தான் முதலிடத்தில் உள்ளார்
கால்பந்து வரலாற்றில் பெனால்டி அல்லாமல், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி முதலிடத்திற்கு முன்னேறினார்
குறிப்பாக, ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.
அதே சமயம் ஒட்டுமொத்தமாக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ தான் முதலிடத்தில் உள்ளார் என்பது குற்றிப்பிடத்தக்கது.
- கடைசியாக கடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது
- சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 2 கோப்பைகளை வென்றுள்ளது
சாம்பியன்ஸ் லீக் T20 தொடரை மீண்டும் நடத்த ஐசிசி அனுமதி தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் செப்டம்பரில் இத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ரசிகர்களின் போதிய ஆதரவின்மை மற்றும் ஸ்பான்சர்ஷிப் பிரச்சனைகள் காரணமாக 2015-ம் ஆண்டு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. 2009 - 2014 வரை நடைபெற்ற அந்தத் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 2 கோப்பைகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின் அடுத்தாண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் நடத்தப்படவுள்ளது. இதில், இந்தியாவின் ஐபிஎல் தொடர், பாகிஸ்தானின் பிஎஸ்எல், ஆஸ்திரேலியாவின் BBL, தென்னாப்பிரிக்காவின் SA20, இங்கிலாந்தின் THE HUNDRED போன்ற உலகெங்கிலும் உள்ள ஃபிரான்சைஸ் தொடர்களில் பட்டம் வென்ற அணிகளை ஒருங்கிணைத்து பிரமாண்ட தொடராக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 90 சிக்சர்கள் விளாசி சேவாக் முதல் இடத்தில உள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், 4 ஆவது டெஸ்ட் போட்டியில் 3 சிக்சர்கள் அடித்தால் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற புதிய சாதனையை ரிஷப் பண்ட் படைப்பார்.
தற்போது ரிஷப் பண்ட் 88 சிக்சர்கள் அடித்து அதிக சிக்ஸர்கள் விளாசிய 2 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித்துடன் பகிர்ந்துள்ளார். இந்த பட்டியலில் 90 சிக்சர்கள் விளாசி சேவாக் முதல் இடத்தில உள்ளார்.
- அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் Freestyle செஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- கடந்த 3 நாட்களில் கார்ல்சனை 2வது முறையாக வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.
உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் Freestyle செஸ் தொடரில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 43வது நகர்வில் வெற்றி பெற்றார்.
கடந்த 3 நாட்களில் கார்ல்சனை 2வது முறையாக வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.






