என் மலர்
நீங்கள் தேடியது "கனடா ஓபன்"
- இகா ஸ்வியாடெக் (போலந்து) கிளாரா டௌசன் (டென்மார்க்) ஆகியோர் மோதினர்.
- இதில் சிறப்பாக ஆடிய கிளாரா டௌசன் 7-6 (7-1), 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் (போலந்து) கிளாரா டௌசன் (டென்மார்க்) ஆகியோர் மோதினர்.
இதில் சிறப்பாக ஆடிய கிளாரா டௌசன் 7-6 (7-1), 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- ஜப்பான் வீராங்கனை ஒசாகா 4வது சுற்றில் வெற்றி பெற்றார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையரில் நடைபெற்ற 4வது சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகா, லாத்வியாவின் செவட்சோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஒசாகா 6-1, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது.
- இந்தத் தொடரில் இருந்து நம்பர் 2 வீரரான அல்காரஸ் விலகி உள்ளார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது.
இந்நிலையில், நம்பர் 2 வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
ஏற்கனவே காயம் காரணமாக நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர், நம்பர் 5 வீரரான ஜோகோவிச் மற்றும் பிரிட்டனின் ஜாக் டிராபர் ஆகியோர் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது.
- காயம் காரணமாக முன்னணி வீரர்கள் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது.
இந்நிலையில், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், நம்பர் 5 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் பிரிட்டனின் ஜாக் டிராபர் ஆகியோர் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.
காயம் காரணமாக கனடா ஓபன் தொடரில் விளையாடவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டில் கனடா ஓபன் டென்னிசில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக பெடரேசன் நடத்தும் தொடரில் வெல்லும் 2-வது சாம்பியன் பட்டம்
- சீன வீரரை நேர்செட் கணக்கில் வென்றார்
கனடா ஒபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், சீனாவில் லி ஷி பெங்-ஐ எதிர்கொண்டார். இதில் 21 வயதாக லக்சயா சென் 21-18, 22-20 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
சீன வீரர் லி ஷி பெங் ஆல் இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ள லக்சயாக சென், இந்திய ஓபனை 2022-ம் ஆண்டு கைப்பற்றியிருந்தார். அதன்பின் தற்போது உலகளவில் விளையாடும் தொடரில் 2-வது சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.






