என் மலர்
நீங்கள் தேடியது "Alexander Bublik"
- சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீரர் பப்ளிக் சாம்பியன் பட்டம் வென்றார்.
சுவிஸ்:
சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இதில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக், அர்ஜென்டினா வீரர் ஜுவான் மேனுவல் செருண்டலோ உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-4 என பப்ளிக் வென்றார். 2வது செட்டை 6-4 என அர்ஜெண்டினா வீரர் கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-3 என வென்ற பப்ளிக் சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.
- சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீரர் பப்ளிக் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
சுவிஸ்:
சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
இதில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக், பிரான்ஸ் வீரர் ஆர்தர் கசாக்ஸ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய பப்ளிக் 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பப்ளிக், அர்ஜென்டினா வீரர் ஜுவான் மேனுவல் செருண்டலோவை சந்திக்கிறார்.
- சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீரர் பப்ளிக் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சுவிஸ்:
சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக், அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ கோம்சேனா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பப்ளிக் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீரர் பப்ளிக் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சுவிஸ்:
சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக், சக நாட்டு வீரரான அலெக்சாண்டர் ஷெவ்சென்கோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பப்ளிக் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள காலிறுதியில் பப்ளிக் அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ கோம்சேனாவை சந்திக்க உள்ளார்.
- ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது.
- இறுதிச்சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்தது.
இதில் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பப்ளிக் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.
- ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ரஷியாவின் கரன் கச்சனாவ் அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ரஷியாவின் கரன் கச்சனாவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-4 என கச்சனாவ் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பப்ளிக் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6-4 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பப்ளிக், மெத்வதேவை சந்திக்கிறார்.
- துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
- இன்று நடந்த அரையிறுதியில் ரஷியாவின் ரூப்லெவ் தோலவி அடைந்தார்.
துபாய்:
துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்குடன் மோதினார்.
இதில் முதல் செட்டை ரூப்லெவ் 7-6 (7-4) என வென்றார். 2வது செட்டை அலெக்சாண்டர் பப்ளிக் 7-6 (7-5) என போராடி வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் பப்ளிக் 6-5 என இருந்தபோது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இறுதியில், பப்ளிக் 6-7 (4-7), 7-6 (7-5), 6-5 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பப்ளிக் மெத்வதேவ் அல்லது யூகோ ஹம்பர்ட்டை சந்திக்க உள்ளார்.






