என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cameron Norrie"

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் கேமரூன் நூரி நேரடியாக 2வது சுற்று ஆட்டத்துக்கு தகுதி பெற்றார்.

    நேற்று நடந்த 2வது சுற்றில் பிரிட்டனின் கேமரூன் நூரி, ஸ்பெயின் வீரர் ராபர்டோ பவுடிஸ்டா உடன் மோதினார்.

    இதில் கேமரூன் நூரி 4-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • முதல் சுற்றில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் கேமரூன் நூரி, ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் கானல் உடன் மோதினார்.

    இதில் நூரி 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் 2வது சுற்றில் கேமரூன் நூரி, ரஷியாவின் டேனில் மெத்வதேவ் உடன் மோதுகிறார்.

    • பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
    • இதில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மேட்ரிட்:

    பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி, ஸ்பெயின் வீரர் ராபெர்டோவுடன் மோதினார்.

    இதில் நூரி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
    • இதில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.

    மேட்ரிட்:

    பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி, அர்ஜென்டினாவின் தாமஸ் மார்ட்டினுடன் மோதினார்.

    இதில் நூரி 6-7 (4-7) 6-7 (1-7) என்ற செட் கணக்கில் தோற்று, தொடரில் இருந்து வெளியேறினார்.

    ×