என் மலர்
விளையாட்டு
- இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கொனேரு ஹம்பி சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார்.
- இன்று 2-வது போட்டியை ‘டிரா’ செய்தாலே ஹம்பி அரையிறுதிக்கு தகுதி பெறுவார்.
பீடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி ஆட் டங்கள் நேற்று தொடங்கியது. முதல் முறையாக 4 இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு தகுதி பெற்று இருந்தனர்.
இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கொனேரு ஹம்பி கால் இறுதியில் சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டார். 53-வது நகர்த்தலின் போது யுக்சின் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதனால் ஹம்பி வெற்றி பெற்றார். அவர் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளார். இன்று 2-வது போட்டியை 'டிரா' செய்தாலே ஹம்பி அரையிறுதிக்கு தகுதி பெறுவார்.
சென்னை கிராண்ட்மாஸ் டரான வைஷாலி சீன வீராங்கனையும், முன்னாள் சாம்பியனுமான டான் ஜோங்கியை சந்தித்தார்.இந்த ஆட்டம் 72-வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
மற்றொரு கால்இறுதியில் இந்திய வீராங்கனைகள் திவ்யா-ஹரிகா மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, தொடக்கத்தில் முந்தினார். பின்னர் 31-வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது. இருவரும் 0.5-0.5 என சம நிலையில் இருந்தனர்.
- இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது.
- இந்த போட்டியில் இருந்து ஷிகர் தவான், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சில வீரர்கள் விலகினார்
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா , இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய மூத்த வீரர்கள் அணியில் ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, பியூஸ் சாவ்லா, ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன், வினய் குமார், அபிமன்யு மிதுன், சித்தார்த் கவுல் குர்க்ரீத் மான் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டியில் இருந்து ஷிகர் தவான், இர்பான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சில வீரர்கள் விலகினார்
பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று குற்றஞ்சாட்டி அவர்கள் விளையாட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கு டிக்கெட் வாங்கியவர்களுக்கான கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
- இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
கிங்ஸ்டன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்தி ஆஸ்திரேலியா தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
இதில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை நடக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு ஆஸ்திரேலிய அணி ஆடும் முதல் டி20 போட்டி இதுவாகும்.
- பிரீஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்து வருகிறது.
- அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார் அர்ஜூன் எரிகைசி.
லாஸ் வேகாஸ்:
பிரீஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 வீரர்கள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக்கில் மோதினர். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களைப் பிடித்தவர்கள் காலிறுதிக்கு முன்னேறினர்.
நேற்று முன்தினம் நடந்த காலிறுதியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் அர்ஜூன் எரிகைசி பிரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, அமெரிக்காவின் லெவன் அரோனியன் உடன் மோதினார். இதில் அர்ஜூன் எரிகைசி தோல்வி அடைந்தார்.
- மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
லண்டன்:
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றி அசத்தியது. தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
சவுத்தாம்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என
முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது. அங்கு மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா அணி, 29 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி 40 ரன்கள் எடுத்தார். தீப்தி ஷர்மா 30 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் கோடினார்.
இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. டாமி பியூமெண்ட் 34 ரன் எடுத்தார்.
ஏமி ஜோன்ஸ் பொறுப்புடன் ஆடினார். நாட் சீவர் பிரண்ட் 21 ரன்னில் வெளியேறினார்.
மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 24 ஓவரில் 115 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இறுதியில், இங்கிலாந்து அணி 21 ஓவரில் 116 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரில் 1-1 என சமனிலை பெற்றுள்ளது.
- சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீரர் பப்ளிக் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
சுவிஸ்:
சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
இதில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக், பிரான்ஸ் வீரர் ஆர்தர் கசாக்ஸ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய பப்ளிக் 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பப்ளிக், அர்ஜென்டினா வீரர் ஜுவான் மேனுவல் செருண்டலோவை சந்திக்கிறார்.
- புனேவில் உள்ள அவரது பங்களாவில் இருந்து ரூ.50,000 ரொக்கம் திருடுபோயுள்ளது.
- போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் வீட்டில் இருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடுபோயுள்ளது.
புனே மாவட்டம் லோனாவாலாவில் உள்ள அவரது பங்களாவில் இருந்து ரூ.50,000 ரொக்கமும், ரூ.7,000 மதிப்புள்ள டிவியும் திருடு போயிருப்பதாக அசாருதீன் புகார் அளித்துள்ளார். மேலும், கொள்ளையடித்தவர்கள் வீட்டையும் சேதப்படுத்தியதாக அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.
- முதல் டெஸ்டில் சாய் சுதர்சன் 3ஆவது இடத்தில் களம் இறங்கினார்.
இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.
முதல் டெஸ்டில் சாய் சுதர்சன் 3ஆவது இடத்தில் களம் இறங்கினார். அவர் சிறப்பாக விளையாடாததால், கருண் நாயர் 3ஆவது இடத்தில் களம் இறக்கப்பட்டார். ஆனால் 20 முதல் 30 என ரன்கள் அடிக்கிறார். பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியவில்லை.
இதனால் கருண் நாயர் 4ஆவது டெஸ்ட் போட்டிக்கு தேவையா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட், "கருண் நாயர் சிறப்பான பங்களிப்பைத் தருவதாக நாங்கள் உணர்கிறோம். 3-வது இடத்தில் களமிறங்கும் வீரரிடமிருந்து அதிக ரன்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனாலும், நமக்குப் பலனளிக்காத சிறிய விஷயங்கள் சரிசெய்யப்படும்"என்று தெரிவித்தார்.
- கயானா அமேசான் வாரியர்ஸ் 196 ரன்கள் அடித்தது.
- ரங்க்பூர் ரைடர்ஸ் அணியால் 164 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
குளோபல் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ்- நுருல் ஹசன் தலைமையிலான ரங்க்பூர் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் களம் இறங்கிய கயானா அமேசான் வாரியர்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. ஜான்சன் சார்லஸ் 48 பந்தில் 67 ரன்கள் விளாசினார். ரஹ்மதுல்லா குர்பாஸ் 38 பந்தில் 66 ரன்கள் குவித்தார்.
பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரங்க்பூர் ரைடர்ஸ் 164 ரன்னில் ஆல்அவுட் ஆனது. சாய்ஃப் ஹசன் 41 ரன்களும், இஃப்திகார் அகமது 46 ரன்களும் அடித்தும் அந்த அணியால் வெற்றிபெற முடியவில்லை. வெயின் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டும் இம்ரான் தாஹிர் மற்றும் குடகேஷ் மோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 32 ரன்கள் வித்தியாசத்தில் கயானா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 160 ரன்கள் சேர்த்தது.
- இங்கிலாந்து அணியால் 155 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
லெஜண்ட் உலக சாம்பியன்ஷிப் டி20 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது. இதில் இங்கிலாந்து சாம்பியன்ஸ்- இந்தியா சாம்பியன்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பாகிஸ்தான் சாம்பியன்ஸ் 160 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஹபீஸ் அதிகபட்சமாக 34 பந்தில் 54 ரன்கள் விளாசினார்.
பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து சாம்பியன்ஸ் களம் இறங்கியது. வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த போதிலும், 20 ஓவர் முடிவில் 155 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து தொடக்க வீரர் பில் முஸ்டார்ட் 58 ரன்கள் அடித்ார். இயன் பெல் 35 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.
இனறு இரண்டு ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ்- தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகளும், 2ஆவது போட்டியில் இங்கிலாந்து சாம்பியன்ஸ்- ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிகளும் மோதுகின்றன.
- கருண் நாயர் 20 மற்றும் 30 என அற்புதமான ரன்களை அடித்துள்ளார்.
- அழகான டிரைவ் போன்ற ஷாட்களால், அழகான 30 ரன்களை பெற்றுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. முதல் டெஸ்டில் சாய் சுதர்சன் 3ஆவது இடத்தில் களம் இறங்கினார். அவர் சிறப்பாக விளையாடாததால், கருண் நாயர் 3ஆவது இடத்தில் களம் இறக்கப்பட்டார். ஆனால் 20 முதல் 30 என ரன்கள் அடிக்கிறார். பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியவில்லை.
இதனால் கருண் நாயர் 4ஆவது டெஸ்ட் போட்டிக்கு தேவையா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் வீரரான பரூக் இன்ஜினீயர் "கருண் நாயர் 20 மற்றும் 30 என அற்புதமான ரன்களை அடித்துள்ளார். அழகான டிரைவ் போன்ற ஷாட்களால், அழகான 30 ரன்களை பெற்றுள்ளார். ஆனால், 3ஆவது இடத்தில் களம் இறங்குபவரிடம் அழகான 30 ரன்கள் எதிர்பார்க்கப்படுவதில்லை" என்றார்.
- கிறிஸ் கெய்ல் 14,562 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
- பொல்லார்டு 13,854 ரன்களுடன் 2ஆவது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விட்டாலிட்டி பிளாஸ்ட் டி20 கிரிக்கெட்டில் ஜாஸ் பட்டலர் 77 ரன்கள் விளாசினார். 31 ரன்கள் எடுத்திருக்கும்போது 13 ஆயிரம் ரன்னைத் தொட்டர். இதன்மூலம் டி20-யில் 13 ஆயிரம் ரன்னைக் கடந்த 7ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கிறிஸ் கெய்ல் 14,562 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். பொல்லார்டு 13,854 ரன்களுடன் 2ஆவது இடத்திலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 13,814 ரன்களுடன் 3ஆவது இடத்திலும், சோயிப் மாலிக் 13,571 ரன்களுடன் 4ஆவது இடத்திலும், விராட் கோலி 13,543 ரன்களுடன் 5ஆவது இடத்திலும், வார்னர் 13,395 ரன்களுடன் 6ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஜாஸ் பட்லர் டி20-யில் மொத்தமாக 13,046 ரன்கள் அடித்துள்ளார்.






