என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    30 ரன்கள் என்பது அழகானதுதான், ஆனால்.. கருண் நாயர் குறித்து பரூக் இன்ஜினீயர் சொல்வது இதுதான்..!
    X

    30 ரன்கள் என்பது அழகானதுதான், ஆனால்.. கருண் நாயர் குறித்து பரூக் இன்ஜினீயர் சொல்வது இதுதான்..!

    • கருண் நாயர் 20 மற்றும் 30 என அற்புதமான ரன்களை அடித்துள்ளார்.
    • அழகான டிரைவ் போன்ற ஷாட்களால், அழகான 30 ரன்களை பெற்றுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. முதல் டெஸ்டில் சாய் சுதர்சன் 3ஆவது இடத்தில் களம் இறங்கினார். அவர் சிறப்பாக விளையாடாததால், கருண் நாயர் 3ஆவது இடத்தில் களம் இறக்கப்பட்டார். ஆனால் 20 முதல் 30 என ரன்கள் அடிக்கிறார். பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியவில்லை.

    இதனால் கருண் நாயர் 4ஆவது டெஸ்ட் போட்டிக்கு தேவையா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் வீரரான பரூக் இன்ஜினீயர் "கருண் நாயர் 20 மற்றும் 30 என அற்புதமான ரன்களை அடித்துள்ளார். அழகான டிரைவ் போன்ற ஷாட்களால், அழகான 30 ரன்களை பெற்றுள்ளார். ஆனால், 3ஆவது இடத்தில் களம் இறங்குபவரிடம் அழகான 30 ரன்கள் எதிர்பார்க்கப்படுவதில்லை" என்றார்.

    Next Story
    ×