என் மலர்
நீங்கள் தேடியது "முஹம்மது அசாருதீன்"
- புனேவில் உள்ள அவரது பங்களாவில் இருந்து ரூ.50,000 ரொக்கம் திருடுபோயுள்ளது.
- போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் வீட்டில் இருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடுபோயுள்ளது.
புனே மாவட்டம் லோனாவாலாவில் உள்ள அவரது பங்களாவில் இருந்து ரூ.50,000 ரொக்கமும், ரூ.7,000 மதிப்புள்ள டிவியும் திருடு போயிருப்பதாக அசாருதீன் புகார் அளித்துள்ளார். மேலும், கொள்ளையடித்தவர்கள் வீட்டையும் சேதப்படுத்தியதாக அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 'VVS லக்ஷ்மன் ஸ்டாண்ட்' என்பது முகமது அசாருதின் ஸ்டாண்ட்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- அப்போது ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த அசாருதின் இருந்தார்.
ஐதராபாத் உப்பல் மைதானத்தின் ஸ்டாண்ட் ஒன்றுக்கு, முன்னாள் வீரர் முகமது அசாருதின் பெயர் சூட்டப்பட்டதை ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் குறைகேட்பு அதிகாரி.ரத்து செய்தார்
'VVS லக்ஷ்மன் ஸ்டாண்ட்' என இருந்ததை, 2019ம் ஆண்டில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த அசாருதின் தலைமையிலான நிர்வாகக் குழு, 'முகமது அசாருதின் ஸ்டாண்ட்' என பெயர் மாற்றம் செய்தது
இது அதிகார துஷ்பிரயோகம் என அளிக்கப்பட்ட புகாரின்பேரில் குறைகேட்பு அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் செயல் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். #MohammadAzharuddin #TelanganaCongressCommittee






