என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.

    சுவிஸ்:

    சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதில், இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றுப் போட்டியில் நார்வேயின் காஸ்பர் ரூட், அர்ஜெண்டினாவின் ஜுவான் மேனுவல் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜுவான் 6-2, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் நார்வேயின் காஸ்பர் ரூட் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீரர் பப்ளிக் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    சுவிஸ்:

    சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக், அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ கோம்சேனா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பப்ளிக் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • விக்கெட் கீப்பிங் செய்யும் அளவிற்கு பூரண குணமடையவில்லை எனில் அவருக்கு ஓய்வு வழங்கலாம்.
    • அவருக்கு பதிலாக முழு உடற்தகுதியுடன் இருக்கும் விக்கெட் கீப்பரை விளையாட வைக்கலாம்.

    இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.

    3-வது டெஸ்ட் போட்டியின் போது ரிஷப் பண்ட் கைவிரல் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்ளாமல் இருந்தார். ஆனாலும் வலியை தாங்கிக் கொண்டு இரண்டு இன்னிங்ஸ்சிலும் பேட்டிங் செய்திருந்தார்.

    அதனால் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூலை 23-ஆம் தேதி தொடங்க இருக்கும் 4-வது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில் ரிஷப் பண்டை முழுநேர பேட்ஸ்மேனாக டெஸ்ட் அணியில் சேர்க்கக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

    இது குறித்து பேசிய அவர் கூறுகையில்:-

    ரிஷப் பண்டை நான் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மனாக மைதானத்தில் பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் அவர் முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடும் பட்சத்தில் களத்தில் நின்று பீல்டிங்கும் செய்ய வேண்டி இருக்கும்.

    அப்படி அவர் பீல்டிங் செய்யும் பட்சத்தில் அவருடைய காயம் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். அவர் விக்கெட் கீப்பராக இருக்கும் பட்சத்தில் கிளவுஸ் அவரது விரல்களை பாதுகாக்கும். ஆனால் கிளவுஸ் இன்றி அவர் மைதானத்தில் பீல்டிங் செய்யும் பட்சத்தில் அது அவருடைய காயத்தை மேலும் மோசப்படுத்தும்.

    எனவே அடுத்த போட்டியில் அவர் விக்கெட் கீப்பிங் செய்யும் அளவிற்கு பூரண குணமடையவில்லை எனில் அவருக்கு ஓய்வு வழங்கலாம். அவருக்கு பதிலாக முழு உடற்தகுதியுடன் இருக்கும் விக்கெட் கீப்பரை விளையாட வைக்கலாம்.

    என்று ரவி சாஸ்திரி கூறினார். 

    • கவுதம் கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் மீது அதிக பாசம் இருப்பதை மதிக்கிறேன்.
    • வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி என மூன்று ஆல் ரவுண்டர்கள் இங்கு தேவையில்லை.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கினை துரத்திய இந்திய அணியானது இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 170 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

    இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி என மூன்று ஆல் ரவுண்டர்கள் இங்கு தேவையில்லை என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில்:-

    இங்கிலாந்து மண்ணில் நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒரு வெளிப்படையான ரகசியம் தான். லார்ட்ஸ் மைதானத்திலும் இந்திய அணி தடுமாற அதுவே காரணம். அதேவேளையில் இங்கிலாந்து அணியின் வீரர்களும் சிறப்பாக பந்துவீசி இருந்தனர். அதேபோன்று இந்திய அணி செய்யும் மிகப்பெரிய தவறு யாதெனில் இங்கிலாந்து மைதானங்களில் முறையான பவுலர்களுடன் விளையாட வேண்டும்.

    கவுதம் கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் மீது அதிக பாசம் இருப்பதை மதிக்கிறேன். ஆனால் வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி என மூன்று ஆல் ரவுண்டர்கள் இங்கு தேவையில்லை. இவர்களில் யாரையாவது ஒருவரை நீக்கிவிட்டு குல்தீப் யாதவை சேர்க்க அவர் நிச்சயம் ஆலோசித்தாக வேண்டும். ஏனெனில் இங்கிலாந்து மண்ணில் குல்தீப் யாதவின் தேவை அதிகமாக இருப்பதாக நான் கருதுகிறேன்.

    என ரகானே கூறினார்.

    • முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 120 ரன்கள் எடுத்தது.
    • 13.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 122 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

    ஜிம்பாப்வேயில் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜிம்பாப்வே, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதி வருகின்றனர்.

    இந்த தொடரின் இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக வெஸ்லி மாதேவரே 32 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து எளிதான இலக்கை நோக்கி டிம் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக சீஃபர்ட்- டெவோன் கான்வே களமிறங்கினர். இதில் சீஃபர்ட் 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனை தொடர்ந்து கான்வே - ரச்சின் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே அரை சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் 13.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 122 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.
    • லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    வெல்லிங்டன்:

    ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    இதில் இன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. இந்நிலையில், இந்த தொடரில் இருந்து நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் கிளென் பிலிப்ஸ் விலகி உள்ளார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் ஆடிய போது அவருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காயம் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்பதால அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

    • வெஸ்லி மாதேவரே 32 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஜிம்பாப்வேயில் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜிம்பாப்வே, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களாக வெஸ்லி மாதேவரே- பிரையன் பென்னட் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். பிரையன் பென்னட் 20 பந்தில் 21 எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக வெஸ்லி மாதேவரே 32 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • பிரதிகா ராவல் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
    • குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காததால் இங்கிலாந்து அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    சவுத்தம்டான்:

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை (3-2 ) முதல்முறையாக வென்று வரலாறு படைத்த இந்திய அணி அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது.

    அதன்படி இரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சவுத்தம்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 262 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இந்திய தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் ஆட்டமிழந்து சென்றபோது அவரது விக்கெட்டை கைப்பற்றிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் சோபி எக்லெஸ்டோனின் தோளில் இடித்தார். இது ஐ.சி.சி. நடத்தை விதிகள் லெவல் 1-ஐ மீறிய குற்றமாகும். இதனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமும் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. பிரதிகா ராவலும் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    மேலும் இந்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காததால் இங்கிலாந்து அணியின் வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து தலா 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

    • லார்ட்ஸ் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்தார்.
    • ஆனால் இரண்டு இன்னிங்சிலும் ஒரேயொரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

    சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் இந்தியா வென்றது. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் வருகிற 23-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.

    லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஜடேஜா அரைசதம் அடித்து கடைசி வரை போராடினார். முதல் இன்னிங்சிலும் 72 ரன்களும், 2ஆவது இன்னிங்சில் 61 (ஆட்டமிழக்கவில்லை) ரன்களும் அடித்திருந்தார்.

    முதல் இன்னிங்சில் 1 விக்கெட் வீழ்த்திய நிலையில், 2ஆவது இன்னிங்சில் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார். மொத்தமாக 6 இன்னிங்சில் 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

    இந்த நிலையில் இங்கிலாந்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி "இந்த தொடரில் ஜடேஜா என்ன செய்கிறார் என்பது அவருக்குத் தெரியும். அவர் பேட்டிங்கில் அற்புதமாக இருக்கிறார். ஆனால் பந்துவீச்சை பொறுத்தவரை, அவர் பெரிய அளவில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. இப்படி இந்த தொடர் முழுவதுமே அவர் பேட்டிங்கில் அசத்தினாலும் முக்கியமான பந்துவீச்சு துறையில் அவர் தடுமாறிவிட்டார் என்று கருதுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    • பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் 92.97 மீ தூரம் வீசி தங்கம் வென்றார்.
    • ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெற்ற பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் வீசி சாதனை படைத்ததோடு தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெற்ற பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

    இதையடுத்து நதீமுக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் அறிவிக்கப்பட்டன. பாகிஸ்தான் அரசும் அவருக்கு பரிசுத்தொகை மற்றும் நிலம் வழங்குவதாக அறிவித்தது.

    இந்நிலையில் பாகிஸ்தான் அரசு அறிவித்த நிலம் வழங்கப்படவில்லை என்று அர்ஷத் நதீம் தெரி வித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, எனக்கு ஏராளமான பரிசுகள் அளித்தார்கள் என்பது உண்மைதான். எனக்கு நிலம் வழங்குவதாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால் அந்த வாக்குறுதிகள் போலியானவை. வாக்குறுதி அளித்தபடி எனக்கு நிலம் வழங்கப்படவில்லை. ஆனால் மற்ற அனைத்து பரிசுகளும் எனக்கு வழங்கப்பட்டன என்றார்.

    • தோனியை விட வீரர்களை சிறப்பாக கையாளும் கேப்டனை நான் பார்த்தது கிடையாது.
    • அவரிடம் இருந்து சுப்மன் கில் பெற்றுக்கொள்ளும் அறிவுரைகள் அவரது கேப்டன் பதவி செயல்பாட்டை நிச்சயம் மேம்படுத்தும்.

    சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் இந்தியா வென்றது. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் வருகிற 23-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.

    இந்த தொடருக்கு முன்பாக ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கேப்டன் பதவி செயல்பாடு குறித்து டோனியிடம் இருந்து சுப்மன் கில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் அறிவுரை வழங்கி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    சுப்மன் கில் தற்போதுதான் கேப்டன் பதவியில் தனது ஆரம்ப கட்டத்தில் இருக்கிறார். அவரிடம் சிறப்பான கேப்டனாக மாறுவதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கிறது. அவர் போட்டி குறித்து நன்கு சிந்திக்க கூடியவராக இருக்கிறார்.

    மேலும் அவர் ஒரு நல்ல பேட்ஸ்மேன் என்பதால் நிச்சயம் அடுத்தடுத்த தொடர்களில் அவர் கேப்டன் ஷிப் குறித்தும் படிப்படியாக கற்றுக்கொள்வார்.

    ஒரு கேப்டன் தனது அணியில் உள்ள வீரர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை முற்றிலுமாக புரிந்து கொண்டவராக இருக்க வேண்டும். முன்னாள் கேப்டனான தோனி ஒரு அணியை எவ்வாறு கையாள வேண்டும், வீரர்களிடம் இருந்து திறனை எவ்வாறு வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதை முழுமையாக தெரிந்து வைத்திருப்பவர்.

    எனவே டோனியிடம் இருந்து அறிவுரைகளை சுப்மன் கில் கேட்டுப் பெறவேண்டும். தோனியை விட வீரர்களை சிறப்பாக கையாளும் கேப்டனை நான் பார்த்தது கிடையாது. எனவே அவரிடம் இருந்து சுப்மன் கில் பெற்றுக் கொள்ளும் அறிவுரைகள் அவரது கேப்டன் பதவி செயல்பாட்டை நிச்சயம் மேம்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போட்டியின் பாதியில் விக்கெட் கீப்பரை மாற்றுவதை நாங்கள் விரும்பவில்லை.
    • முழு உடற்தகுதியுடன் இருந்தால், அடுத்த டெஸ்டில் பேட்டிங் மற்றும் கீப்பிங் இரண்டையும் செய்வார் என்றார்.

    இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லார்ட்சில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கைவிரலில் காயம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு பதிலாக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பிங் செய்தார். ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய மட்டும் வந்தார்.

    இந்த நிலையில் காயம் காரணமாக 4-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சந்தேகம் நிலவுகிறது. இதுதொடர்பாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரையான் டென்டஸ்சாட் கூறியதாவது:-

    4-வது டெஸ்டில் ரிஷப் பண்ட் விளையாடுவார். ஆனால் அவர் விக்கெட் கீப்பிங் செய்வது பற்றி உறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. கீப்பிங் தான் அவர் குணமடைவதில் கடைசிப் பகுதி. அவர் கீப்பிங் செய்ய முடியுமா என்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். போட்டியின் பாதியில் விக்கெட் கீப்பரை மாற்றுவதை நாங்கள் விரும்பவில்லை. அவர் முழு உடற்தகுதியுடன் இருந்தால், அடுத்த டெஸ்டில் பேட்டிங் மற்றும் கீப்பிங் இரண்டையும் செய்வார் என்றார்.

    ×