என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்து தொடர்: ஜடேஜா பந்து வீச்சில் தடுமாறி விட்டார்- மொயீன் அலி
- லார்ட்ஸ் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்தார்.
- ஆனால் இரண்டு இன்னிங்சிலும் ஒரேயொரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் இந்தியா வென்றது. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் வருகிற 23-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.
லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஜடேஜா அரைசதம் அடித்து கடைசி வரை போராடினார். முதல் இன்னிங்சிலும் 72 ரன்களும், 2ஆவது இன்னிங்சில் 61 (ஆட்டமிழக்கவில்லை) ரன்களும் அடித்திருந்தார்.
முதல் இன்னிங்சில் 1 விக்கெட் வீழ்த்திய நிலையில், 2ஆவது இன்னிங்சில் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார். மொத்தமாக 6 இன்னிங்சில் 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில் இங்கிலாந்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி "இந்த தொடரில் ஜடேஜா என்ன செய்கிறார் என்பது அவருக்குத் தெரியும். அவர் பேட்டிங்கில் அற்புதமாக இருக்கிறார். ஆனால் பந்துவீச்சை பொறுத்தவரை, அவர் பெரிய அளவில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. இப்படி இந்த தொடர் முழுவதுமே அவர் பேட்டிங்கில் அசத்தினாலும் முக்கியமான பந்துவீச்சு துறையில் அவர் தடுமாறிவிட்டார் என்று கருதுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.






