என் மலர்
கிரிக்கெட் (Cricket)

முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே அணியை எளிதாக வீழ்த்தியது நியூசிலாந்து
- முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 120 ரன்கள் எடுத்தது.
- 13.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 122 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வேயில் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜிம்பாப்வே, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதி வருகின்றனர்.
இந்த தொடரின் இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக வெஸ்லி மாதேவரே 32 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து எளிதான இலக்கை நோக்கி டிம் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக சீஃபர்ட்- டெவோன் கான்வே களமிறங்கினர். இதில் சீஃபர்ட் 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து கான்வே - ரச்சின் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே அரை சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் 13.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 122 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.






