என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதிகா ராவல்"

    • கடைசி லீக் போட்டியின்போது காயம் ஏற்பட்டு அணியில் இருந்து விலகினார்.
    • இதனால் சாம்பியன் கோப்பை வழங்கப்படும்போது, அவருக்கு பதக்கம் வழங்கப்படவில்லை.

    மகளிர் உலக கோப்பை தொடரில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதன்முறையாக 50 ஓவர் உலக கோப்பையை வென்றது.

    உலக கோப்பைக்கான இந்திய அணியில் பிரதிகா ராவல் இடம் பிடித்திருந்தார். இவர் தொடக்க வீராங்கனையாக களமிறங்கி அணிக்கு பலம் சேர்த்தார். ஏழு லீக் போட்டிகளில் விளையாடி 308 ரன்கள் குவித்தார். இதில் நியூசிலாந்திற்கு எதிராக அவர் எடுத்த 122 ரன்கள் இந்தியாவின் அரையிறுதி கனவை நனவாக்கியது.

    ஆனால், வங்கதேசத்திற்கு எதிரான கடைசி லீக் போட்டியில் எதிர்பாராத விதமாக அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்குப் பதிலாக ஷபாலி வர்மா அணியில் சேர்க்கப்பட்டார்.

    உலக கோப்பை தொடரில் ஒரு அணியில் 15 பேர்தான் இடம் பெற முடியும் என்பதால், பிரதிகா ராவல் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதனால் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற போதிலும், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் பதக்கத்தை பிரதிகா ராவல் பெற முடியாமல் போனது. அவருக்குப் பதிலாக கடைசி நேரத்தில் இடம்பிடித்த ஷஃபாலி வர்மாவுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

    பிரதமர் மோடி உடனான இந்திய வீராங்கனைகளின் சந்திப்பில் இடம் பெற்றிருந்த பிரதிகா ராவல் உலகக்கோப்பை வெற்றி பதக்கத்தை அணிருந்திருந்தார். அதேவேளையில் மற்றொரு வீராங்கனை அமன்ஜோத் பதக்கம் அணியாமல் இருந்தார். இதனால் உண்மையில் பிரதிகாவிற்கு பதக்கம் கிடைத்துவிட்டதா அல்லது அமன்ஜோத் தன்னுடைய பதக்கத்தை கொடுத்தாரா என்ற குழப்பம் ஏற்பட்டது..

    இந்த நிலையில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா தலையீடு காரணமாக தனக்கான பதக்கம் வந்து கொண்டிருப்பதாக பிரதிகா ராவல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதிகா ராவல் கூறியதாவது:-

    பிரதமர் மோடி உடனான சந்திப்பில் நான் அணிந்திருக்க பதக்கம் சப்போர்ட் ஸ்டாஃப் ஒருவர் கொடுத்தார். அப்போது அந்த பதக்கத்தை பார்த்தபோது எனக்கு உண்மையில் கண்ணீர் வந்துவிட்டது. நான் பொதுவாக கண்ணீர் விடக்கூடிய ஆள் இல்லை. ஆனால் அந்த தருணம் என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.

    அதேவேளையில் ஜெய் ஷா எனக்காக ஐசிசி இடம் பேசி பதக்கத்தை வரவைப்பதாகவும், பிரதிகா ராவலுக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் எனவும் எங்கள் மானேஜரிடம் தெரிவித்திருந்தார். அது உறுதியாகிவிட்டது. தற்போது என்னுடைய பதக்கம் வந்து கொண்டிருக்கிறது.

    இவ்வாறு பிரதிகா ராவல் தெரிவித்துள்ளார்.

    • உலக கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக பிரதிகா ராவல் வெளியேறினார்.
    • பிரதிகா ராவல் இந்த உலக கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடி 308 ரன்கள் அடித்திருந்தார்

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், உலக கோப்பை தொடரில் காயம் காரணமாக வெளியேறிய பிரதிகா ராவல், சக்கர நாற்காலியில் அழைத்து வந்து இந்திய மகளிர் அணியினர் வெற்றியை கொண்டாடினர்.

    பிரதிகா ராவல் இந்த உலக கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடி 308 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 6 போட்டிகளில் 308 ரன்கள் விளாசியுள்ளார்.
    • நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்திருந்தார்.

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. பீல்டிங் செய்தபோது இந்திய வீராங்கனை பிரதிகா ராவலுக்கு காலில் பயங்கர காயம் ஏற்பட்டது. இதனால் வியாழக்கிழமை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்தது.

    இந்த நிலையில் மகளிர் உலக கோப்பையின் எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷஃபாலி வர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஒருநாள் போட்டியில் விளையாடி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது.

    பிரதிகா ராவல் ஸ்மிரிதி மந்தனாவுடன் இணைந்து தொடக்க பேட்டராக சிறப்பாக விளையாடி வந்தார். நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசினார். 6 போட்டிகளில் 308 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 51.33 ஆகும்.

    பிரதிகா ராவல் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷும் காயத்தில் அவதிப்பட்டு வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச அணிக்கெதிராக அவர் விளையாடவில்லை.

    • இந்திய நட்சத்திர தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
    • ஸ்மிரிதி மந்தனாவுடன் தொடக்க வீரராக விளையாடலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    மகளிர் உலகக்கோப்பை தொடரில் நேற்று அரங்கேறிய 28-வது மற்றும் கடைசி லீக்கில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. நடப்பு தொடரில் பாதியில் ரத்தான 6-வது ஆட்டம் இதுவாகும்.

    முன்னதாக இந்த ஆட்டத்தில் பீல்டிங்கின்போது இந்திய நட்சத்திர தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து கைத்தாங்கலாக வெளியே அழைத்து செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் பெண்கள் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில், பிரதிகா ராவல் காயம் காரணமாக விளையாட முடியாவிட்டால், ஹர்லீன் டியோல் ஸ்மிரிதி மந்தனாவுடன் தொடக்க வீரராக விளையாடலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பிரதிகா சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பிரதிகா ராவல் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
    • குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காததால் இங்கிலாந்து அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    சவுத்தம்டான்:

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை (3-2 ) முதல்முறையாக வென்று வரலாறு படைத்த இந்திய அணி அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது.

    அதன்படி இரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சவுத்தம்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 262 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இந்திய தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் ஆட்டமிழந்து சென்றபோது அவரது விக்கெட்டை கைப்பற்றிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் சோபி எக்லெஸ்டோனின் தோளில் இடித்தார். இது ஐ.சி.சி. நடத்தை விதிகள் லெவல் 1-ஐ மீறிய குற்றமாகும். இதனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமும் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. பிரதிகா ராவலும் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    மேலும் இந்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காததால் இங்கிலாந்து அணியின் வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து தலா 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

    • மகளிருக்கான முத்தரப்பு தொடரில் இலங்கை, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் விளையாடி வருகிறது.
    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பிரதிகா 78 ரன்கள் எடுத்தார்.

    இலங்கையில் நடைபெறும் மகளிருக்கான முத்தரப்பு தொடரில் இலங்கை, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    கடந்த 27-ந் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரதிகா ராவல் 78 ரன்கள் குவித்தார்.

    இதனை தொடர்ந்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.

    முன்னதாக இந்திய அணி வீராங்கனை பிரதிகா ராவல் அரை சதம் அடித்ததன் மூலம் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    அந்த வகையில் மகளிர் ஒருநாள் போட்டியில் குறைந்த ஆட்டத்தில் 500 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை பிரதிகா படைத்துள்ளார்.

    முதல் 8 போட்டிகளில் 40(69), 76 (86), 18 (23), 89 (96), 67 (61), 154 (129), 50 (62), 78 (91) அவர் 5 அரைசதம் 1 சதம் விளாசியுள்ளார்.

    அதிவேக 500 ரன்கள் குவித்த வீராங்கனைகள் விவரம்:-

    பிரதிகா ராவல் - 8 இன்னிங்ஸ் (இந்தியா)

    சார்லோட் எட்வர்ட்ஸ் - 9 இன்னிங்ஸ் (இங்கிலாந்து)

    நிக்கோல் போல்டன் - 11 இன்னிங்ஸ் (ஆஸ்திரேலியா)

    பெலிண்டா கிளார்க் - 12 இன்னிங்ஸ் (ஆஸ்திரேலியா)

    வெண்டி வாட்சன் - 12 இன்னிங்ஸ் (இங்கிலாந்து)

    மேலும் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த 3-வது வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    188 - தீப்தி சர்மா vs IRE-W, போட்செஃப்ஸ்ட்ரூம், 2017

    171* - ஹர்மன்ப்ரீத் கவுர் vs AUS-W, டெர்பி, 2017

    154 - பிரதிகா ராவல் vs IRE-W, ராஜ்கோட், 2025

    143* - ஹர்மன்ப்ரீத் கவுர் vs ENG-W, கேன்டர்பரி, 2022

    138* - ஜெயா சர்மா vs PAK-W, கராச்சி, 2005

    • முதல் விக்கெட்டுக்கு மந்தனா- பிரதிகா ஜோடி 110 ரன்கள் குவித்தது.
    • மந்தனா 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா- பிரதிகா ராவல் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தனர். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்த இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி திணறியது.

    இந்நிலையில் 16 ஓவரின் போது பிரதிகா அடித்த பந்து லெக் திசையில் சென்றது. முதலில் ஒரு ரன் என்பது போல இந்த ஜோடி பாதியில் வேகமாக ஓடி இரண்டு ரன்களை எடுக்க முயற்சித்தது. அப்போது பிரதிகா 2-வது ரன் எடுக்க முடியாது என தெரிந்து வேண்டாம் என தெரிந்து மந்தாவை வேண்டாம் என கூறினார். அதை கவனிக்காமல் பாதி வரை மந்தனா ஓடி வந்து விட்டார்.

    இதனை பார்த்த பிரதிகா மந்தனா அவுட் ஆக கூடாது என நினைத்து கீப்பர் பக்கம் ஓடினார். ஆனால் மந்தனா கீப்பர் பக்கம் நின்றதால் மந்தனா தான் அவுட் என அறிவிக்கப்பட்டது. இதனால் பிரதிகா சோகத்துடன் இருந்தார். அவுட் ஆகி சென்ற மந்தனா மீண்டும் திரும்பி வந்து அவரை சமாதானப்படுத்தி தட்டிக் கொடுத்து சென்றார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

    கிரிக்கெட்டில் நிறைய ரன் அவுட் ஆன வீரர், வீராங்கனை ஆக்ரோஷமாக சந்தமிட்ட கோபத்துடன் சென்றதை அதிகம் பார்த்த நிலையில் மந்தனா மற்றும் பிரதிகா செய்த செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

    • ஸ்மிருதி மந்தனா 80 பந்தில் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • பிரதிகா ராவல் 129 பந்தில் 154 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பிரதிகா ராவல் 129 பந்தில் 154 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

    ராஜ்கோட்:

    அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 116 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

    இந்த நிலையில் இந்தியா-அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீராங்கனைகளாக மந்தனா - பிரதிகா ராவல் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய மந்தனா அவ்வபோது சிக்சர்களை பறக்கவிட்டார்.அவர் 80 பந்தில் 135 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.இதில் 12 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் அடங்கும்.

    தொடர்ந்து விளையாடிய பிரதிகா ராவலும் 129 பந்தில் 154 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிச்சா ஹோஷ் (59) அரை சதம் விளாசி அவுட் ஆனார்.

    அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 435 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

    மேலும் அதிக ரன்கள் குவித்த அணிகள் பட்டியலில் இந்தியா 4 -வது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களில் நியூசிலாந்து அணி உள்ளது.

    • அயர்லாந்து அணி 131 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ராஜ்கோட்:

    அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 116 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

    இந்த நிலையில் இந்தியா-அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 435 ரன்கள் குவித்துள்ளது. அதிக பட்சமாக தொடக்க வீராங்கனைகளாக மந்தனா (135), பிரதிகா ராவல் (154) சதம் அடித்து அசத்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் அயர்லாந்து அணி 131 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சாரா ஃபோர்ப்ஸ் 41 ரன்கள் எடுத்தார். இதனால் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது.

    ×