என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முதல் டி20 போட்டியில் பாகிஸ்தானை பந்தாடியது வங்காளதேசம்
    X

    முதல் டி20 போட்டியில் பாகிஸ்தானை பந்தாடியது வங்காளதேசம்

    • டாஸ் வென்ற வங்காளதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 110 ரன்னில் ஆல் அவுட்டானது.

    டாக்கா:

    பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.3 ஓவரில் 110 ரன்களுக்கு சுருண்டது. தொடக்க ஆட்டக்காரர் பகத் சமான் 44 ரன்னும், அப்பாஸ் அப்ரிடி 22 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பர்வேஸ் ஹொசைன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து வெற்றிக்கு உறுதுணையாக நின்றார். தவ்ஹித் ஹிருடோய் 36 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், வங்காளதேசம் 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரில் வங்காளதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது பர்வேஸ் ஹொசைனுக்கு வழங்கப்பட்டது.

    Next Story
    ×