search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சவுரவ் கங்குலி - ஹர்பஜன் சிங்
    X
    சவுரவ் கங்குலி - ஹர்பஜன் சிங்

    இந்திய கிரிக்கெட்டில் இது புது ஃபேஷன் ஆகிவிட்டது.. -பிசிசிஐயை கிழித்த வீரர்கள்

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முன்னாள் வீரரான டிராவிட்டுக்கு அளித்த நோட்டீஸ் தொடர்பாக, இந்திய வீரர்கள் பிசிசிஐக்கு எதிராக தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
    புது டெல்லி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி ஜெயின், முன்னாள் வீரரான ராகுல் டிராவிட்டிற்கு நோட்டீஸ் அளித்துள்ளார். இந்த நோட்டீசில், ராகுல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பொறுப்பு வகிக்கும்போது, இந்தியா சிமெண்ட்சில் எப்படி துணை தலைவராக இன்னொரு பதவி வகிக்க முடியும்? என கேட்கப்பட்டுள்ளது.

    இந்த கேள்விக்கு ராகுல் விளக்கம் அளிக்க பிசிசிஐ 2 வாரம் கால அவகாசம் கொடுத்துள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக செயல்பட்டு வருகிறது.

    இதனை எதிர்த்து முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில், 'பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியின் மூலம் டிராவிட்டிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது இந்திய கிரிக்கெட்டில் இப்போது புது ஃபேஷனாகவே மாறிவிட்டது. செய்திகளில் வலம் வரவும் புதிய வழியாக இருக்கிறது. கடவுள்தான் இந்திய அணியை காப்பாற்ற வேண்டும்' என பதிவிட்டிருந்தார்.



    இதற்கு ஆதரவாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், 'இந்திய கிரிக்கெட் எதை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது? என தெரியவில்லை. இந்திய கிரிக்கெட்டுக்கு டிராவிட்டை தவிர சிறந்த நபரை காண முடியாது. இது போன்ற ஜாம்பவான்களுக்கே நோட்டீஸ் அனுப்பப்படுவது அவர்களை அவமதிப்பதைப் போல உள்ளது.

    டிராவிட்டை போன்றவர்கள் இந்திய அணியின் மேம்பாட்டிற்கு அவசியமானவர்கள். ஆம், கடவுள்தான் இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும்' என பதிவிட்டுள்ளார். 
    Next Story
    ×