search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹர்பஜன் சிங்"

    • கீப்பர் பேட்ஸ்மேன் பற்றி எந்த விவாதமும் இருக்கக்கூடாது.
    • டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நிச்சயம் சேர்க்கபட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

     இது குறித்து அவர் கூறியதாவது:-

    யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டம் நிரந்தரமானது என்பதற்கு சான்றாகும். ஃபார்ம் தற்காலிகமானது. மேலும் கீப்பர் பேட்ஸ்மேன் பற்றி எந்த விவாதமும் இருக்கக்கூடாது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நிச்சயம் இடம் பெற வேண்டும். ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டனாக அவரை வளர்த்தெடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விராட் கோலி தன்னுடைய வீரர்களை வெற்றிக்கு கடுமையாக போராட வைப்பார்.
    • பஃப் டு பிளேஸிஸை நீங்கள் விளையாட வைக்க வேண்டும்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 196 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 15.3 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    அதிக ரன்கள் குவித்தும் குறைந்த ஓவரில் மும்பை அணி வெற்றிபெற்றது ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

    இந்நிலையில் டு பிளேசிஸ் தலைமையில் பெங்களூரு அணி கொஞ்சம் கூட போராடாமல் தோல்விகளை சந்தித்து வருவதாக முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் விராட் கோலியை கேப்டனாக நியமியுங்கள் என்று சொல்வேன். அதை செய்தால் குறைந்தபட்சம் அவர்களுடைய அணியில் வெற்றிக்கான போராட்டம் இருக்கும்.

    விராட் கோலி தன்னுடைய வீரர்களை வெற்றிக்கு கடுமையாக போராட வைப்பார். பஃப் டு பிளேஸிஸை நீங்கள் விளையாட வைக்க வேண்டும். அவரால் சில வீரர்கள் வெளியே அமர்ந்திருக்கின்றனர்.

    ஒவ்வொரு வருடமும் சதமடிக்கும் ஒரு வீரர் வெளியே அமர்ந்திருக்கிறார். அதாவது டு பிளேஸிஸ் கேப்டனாக இருப்பதால் விராட் கோலி எதுவும் செய்ய முடியாமல் உட்கார்ந்திருக்கிறார்.

    எனவே விராட் கோலியை கேப்டனாக நியமியுங்கள். அவருடைய தலைமையில் இந்த அணி போராடி பின்னர் வெல்லும்.

    என்று ஹர்பஜன் சிங் கூறினார்.

    • இன்றைய நாளில் சிறந்த லெக் ஸ்பின்னர் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
    • தற்போது தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள், நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பது வேறு விசயம்.

    டி20 உலகக் கோப்பை இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது. இந்திய அணி சரியான அணியை தேர்வு செய்வதற்கான சோதனையில் இறங்கிவிட்டது.

    சுழற்பந்து வீச்சாளர்களில் பிஷ்னோய், அக்சார் பட்டேல், ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு சிறந்த நபரை தேர்வு செய்ய இருக்கிறது.

    ஆனால் டி20-யில் சிறப்பாக பந்து வீசும் ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளரான சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் நம்பர் ஒன் பந்து வீச்சாளர் ஏன்ற புறக்கணிக்கப்படுகிறார் எனத் தெரியவில்லை என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது:-

    சுழற்பந்து வீச்சு என்று வந்தாலே, நான் சாஹலைத்தான் முதலில் தேர்வு செய்வேன். அவர் புறக்கணிக்கப்படுகிறார். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இன்றைய நாளில் கூட, சிறந்த லெக் ஸ்பின்னர் இருப்பதாக நான் நினைக்கவில்லை. சாஹலை விட தைரியமான ஸ்பின்னர் உள்ளனர் என்று நான் நினைக்கவில்லை. மிகவும் கூர்மையான மனநிலை கொண்டனர்.

    2-வதாக ஜடேஜாவை தேர்வு செய்வேன். ஆஃப் ஸ்பின்னர் தேவைப்பட்டால் வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்யலாம். தற்போது தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள், நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பது வேறு விசயம்."

    இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    • மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
    • இதை வலியுறுத்தி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார்.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இந்த நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து மீட்புப் பணியில் ஈடுபடுவதுதான் உடனடி தீர்வுக்கு முக்கிய காரணம்.

    இதை வலியுறுத்தி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் " " எனப்பதிவிட்டுள்ளார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங் தமிழ் மக்கள் பாசத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார். இதனால் அடிக்கடி தமிழில் டுவீட் செய்வது வழக்கம். தற்போது சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலையில், மக்களுக்கு ஆதரவாக பதிவு செய்துள்ளார்.

    • சர்வதேச கிரிக்கெட்டில் 712 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்
    • வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 75 டெஸ்ட் விக்கெட்

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். 2-வது இன்னிங்சில் இதுவரை வீழ்ந்த இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    கபில்தேவ் 89 விக்கெட்டுகளுடன் முதல் இடம் பிடித்துள்ளார். அஸ்வின் 75 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். கும்ப்ளே 74 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அனில் கும்ப்ளே 956 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அஸ்வின் 712 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    ஹர்பஜன் 711 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். கபில்தேவ் 687 விக்கெட்டுகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

    • சமீபத்திய சில ஆட்டங்களின் முடிவை வைத்து அவரது கேப்டன்ஷிப்பை மதிப்பிடுவது நியாயமற்றது.
    • இது மாதிரி குற்றம் சாட்டுவதை விட்டு அவருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம்.

    மும்பை:

    ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் நேற்று அளித்த பேட்டியில், 'ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து கொஞ்சம் அதிகமாக விமர்சிக்கிறார்கள். கிரிக்கெட் ஒரு அணி விளையாட்டு. தனிநபரால் அணியை குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு செல்ல முடியாது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி நன்றாக ஆடவில்லை என்பது உண்மை தான். நீங்கள் அணியின் செயல்பாடு குறித்து பேசிவிட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்து விட வேண்டும்.

    ஆனால் ரோகித் சர்மாவை மட்டும் குறி வைத்து விமர்சிப்பது நேர்மையற்றது. உண்மையில் அவர் ஒரு அற்புதமான கேப்டன். அவருடன் நான் இணைந்து விளையாடி இருக்கிறேன். அவரை நெருக்கமாக கவனித்து இருக்கிறேன். அவரது தலைமைத்துவத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் ஓய்வறையில் மட்டுமல்ல, இந்திய வீரர்களின் ஓய்வறையிலும் நிறைய மதிப்பு, மரியாதை உண்டு.

    சமீபத்திய சில ஆட்டங்களின் முடிவை வைத்து அவரது கேப்டன்ஷிப்பை மதிப்பிடுவது நியாயமற்றது. இது மாதிரி குற்றம் சாட்டுவதை விட்டு அவருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம்.

    அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பக்கபலமாக இருக்க வேண்டும். கிரிக்கெட் வாரியத்தில் அவருக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் இது போன்ற ஆதரவு தான் அவர் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்க உதவிகரமாக இருக்கும்' என்றார்.

    • அழுத்தமான பெரிய போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ், பேட் கமின்ஸ் தங்களது திறமையால் முடிவை தலைகீழாக மாற்ற கூடியவர்கள் ஆவர்.
    • இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்படும் விராட் கோலியை அவர் தேர்ந்தெடுக்கவில்லை.

    டி20 போட்டிகள் ரசிகர்களால் அதிகமாக பார்க்கப்படும் கிரிக்கெட்டாக உருவெடுத்துள்ளது. அதன் காரணமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான மவுசு குறைந்து வருவதாக நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் அழிவின் விளிம்பில் சென்ற அதற்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனும் பிரத்தியேக உலகக்கோப்பை ஐசிசி அறிமுகப்படுத்தியதால் தற்போது டெஸ்ட் போட்டிகள் டி20 கிரிக்கெட் போல த்ரில்லாக நடைபெறுகிறது.

    இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் தற்போதைய கேம் சேஞ்சர்ஸ் பென் ஸ்டோக்ஸ், ஜடாஜா, ரிஷப் பண்ட், ஸ்மித், நாதன் லயன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். 

    மேலும் கூறியதாவது:- அழுத்தமான பெரிய போட்டிகளில் தங்களது திறமையால் முடிவை தலைகீழாக மாற்ற கூடியவர்கள் பென் ஸ்டோக்ஸ், பேட் கமின்ஸ் ஆகியோர் ஆவர். மேலும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் வெளிநாட்டு மண்ணின் சதங்களை அடித்து காபா போன்ற வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ரிசப் பண்ட் ஆகிய இந்திய வீரர்களை பெயரிட்டுள்ளார்.

    அதே போல சுழலுக்கு சாதகமற்ற ஆஸ்திரேலிய மைதானங்களில் அசத்தலாக செயல்பட்டு சுமார் 500 விக்கெட்களை எடுத்து 100 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடிய வீரராக சமீபத்தில் சாதனை படைத்த நேதன் லையனையும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 9000-க்கு மேற்பட்ட ரன்களை அடித்து ஜாம்பவானாக அசத்தி வரும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை மேட்ச் வின்னர்களாக தேர்வு செய்துள்ளார்.

    இருப்பினும் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து மேட்ச் வின்னராக போற்றப்படும் விராட் கோலியை தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐசிசி தொடர்களில் இந்திய அணி நாக்அவுட் சுற்றில் தடுமாற்றம் அடைவது நீடிக்கிறது
    • அதிக அழுத்தம் தருகின்ற சூழல் வரும் பொழுது ஒருவிதமான இறுக்கமான மனநிலைக்கு சென்று விடுகிறார்கள்

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 2013-ம் வருடம் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றபின் பல தொடர்களில் இந்திய அணி, நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியுள்ளது. இதனால் தற்பொழுது நடைபெறும் போட்டி, இந்தியாவிற்கு இழந்த நற்பெயரை மீட்கும் ஒரு அரிய வாய்ப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த போட்டி, உலகெங்குமுள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

    ஆனால் தற்போதைய இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவிக்க, பிறகு பேட்டிங் செய்து வரும் இந்தியா சொற்ப ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் இந்தியாவின் ஆட்டம் எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளதால் ரசிகர்களும் விமர்சகர்களும் பல விமர்சன கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரும், இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் பங்கேற்று விளையாடிய சாதனையாளருமான ஹர்பஜன் சிங் இந்த போட்டி குறித்து கூறியதாவது:-

    ஒரு உலகக் கோப்பை போட்டியில் விளையாட தேவைப்படும் மன உறுதியும், தைரியமும் இந்திய அணி வெளிப்படுத்த தவறி விட்டது. நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடச் சென்றதும் சற்று அதீதமானது. ஒருவேளை இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம், அணித்தேர்வுக்கு முன் முதல் நாள் சூழ்நிலையை கணக்கில் கொண்டு தெர்வு செய்திருக்கலாம்.

    நம்முடைய வீரர்களின் திறனில் குறை இல்லை. ஆனால், அவர்கள் இன்னும் அதிகளவில் பெரிய கோப்பைகளுக்கான விளையாட்டில் பயமோ, கவலையோ இன்றி ஆடப் பழக வேண்டும். இப்பொழுது வீரர்கள், அதிக அழுத்தம் தருகின்ற சூழல் வரும் பொழுது ஒருவிதமான இறுக்கமான மனநிலைக்கு சென்று விடுகிறார்கள். அவர்களால் இயல்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்த இயலவில்லை. ஆட்டத்தின் முடிவை பற்றி கவலைப்படாமல் உற்சாகமாக விளையாட வீரர்கள் பழகிக் கொள்ள வேண்டும்.

    வீரர்களுக்கு அவர்களின் இயல்பான விளையாட்டை ஆடுவதற்கு ஊக்கமளிக்கப் பட வேண்டும். அணி தோல்வியடைந்தால், தாம் உடனே வெளியேற்றப்படுவோம் என்ற வகையில் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அவர்களின் தன்னம்பிக்கை தகர்ந்து விடும். மாறாக அவர்கள் தங்களின் திறமையை முழுதும் வெளிக்கொண்டு வந்து சிறப்பான ஆட்டத்தை காண்பித்தால் போதும் என ஊக்குவிக்கப்பட வேண்டும்

    இவ்வாறு ஹர்பஜன் தெரிவித்தார்.

    இரண்டாவது இன்னிங்சில் இந்தியா சிறப்பாக விளையாடும் என அனைவரும் நம்புகின்றனர்.

    • இன்று அவர் இருக்கும் இடத்தை அடைய மிகத்தீவிரமாக உழைத்திருக்கிறார்.
    • இளம் வீரர்களுக்கும் சிறுவர்களுக்கும் அவர் வாழ்க்கை மிகச்சிறந்த பாடம்.

    ஐபிஎல் 16-வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் டாப் 2 இடங்களில் வலுவாக இருப்பதால் அவை இரண்டும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். எஞ்சிய 2 இடங்களுக்கு டெல்லி கேப்பிட்டள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸை தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த சீசனில் சில இளம் வீரர்கள் அபாரமாக விளையாடி அசத்தியுள்ளனர். திலக் வர்மா, ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் ஷர்மா ஆகிய வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடிவருகின்றனர். இவர்களில் அபிஷேக்கை தவிர மற்ற மூவரும் இந்திய அணியில் ஆடுமளவிற்கு வளர்ந்துவிட்டனர். இவர்கள் மூவரும் விரைவில் இந்திய அணியில் ஆடுவார்கள் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர்.

    இந்நிலையில் கேகேஆர் வீரர் ரிங்கு சிங் விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார் என்று ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

     

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசியதாவது:-

    ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் மிக விரைவில் வாய்ப்பு கிடைக்கும். அதற்கு இன்னும் ரொம்ப தூரம் இல்லை. இன்று அவர் இருக்கும் இடத்தை அடைய மிகத்தீவிரமாக உழைத்திருக்கிறார்.

    அவர் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்குத்தான் முழு கிரெடிட். இளம் வீரர்களுக்கும் சிறுவர்களுக்கும் ரிங்கு சிங்கின் வாழ்க்கை மிகச்சிறந்த பாடம்.

    என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    • டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இதன் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் தொடர்கிறது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 55வது லீக் ஆட்டம் இன்று (மே 09) நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல் அணியும் மோதின. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.

    டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிஎஸ்கே 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை குவித்தது. இதனையடுத்து ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

    இந்நிலையில் வெற்றியை தேடுபவர்களுக்கு மத்தியில் வெற்றிக்கு விலாசம் கொடுத்த மாமன்னன் மஹி என ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் செய்துள்ளார்.

    சிஎஸ்கே முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்ட டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது:-

    எத்தனை அரசர்கள் இருக்கிறார்கள் என்பதைவிட. எப்படிப்பட்ட அரசன் இருக்கிறார் என்பதே முக்கியம். மஞ்சள் ஆடை சூடிய சந்தன கருப்பு எம்.எஸ்.டோனி முன் டெல்லி கேபிட்டல்ஸ் மட்டும் தப்ப முடியுமா. வெற்றியை தேடுபவர்களுக்கு மத்தியில்.,வெற்றிக்கு விலாசம் கொடுத்த மாமன்னன் மஹி!"

    என்று குறிப்பிட்டுள்ளார்.

    • விராட் மற்றும் கம்பீருக்கு இடையேயான வாக்குவாதம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.
    • ஸ்ரீ சாந்தை அறைந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன் எனவும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

    லக்னோ:

    லக்னோ-பெங்களூர் இடையே போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கி கொண்டபோது விராட்கோலிக்கும், காம்பீருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    விராட்கோலியிடம் லக்னோ வீரர் கெய்ல் மேயர்ஸ் பேசிக்கொண்டு இருந்தார். அந்த பக்கம் வந்த காம்பீர், கெய்ல் மேயர்சை அவரிடம் என்ன பேச்சு என்று கூறி அழைத்து சென்றார். இதனால் கோலி ஆத்திரம் அடைந்தார். இதேபோல லக்னோ வீரர் நவீன்-உல்-ஹக்குடன் கைகுலுக்கும் போதும் கோலி வம்புக்கு இழுத்து ஆத்திரப்படுத்தினார்.

    அதைத்தொடர்ந்து காம்பீருக்கும், விராட் கோலிக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இருவரையும் மற்ற வீரர்கள் தடுத்தப்போது வாக்குவாதம் நிற்கவில்லை. காம்பீர் முன்னோக்கி சென்று கடுமையாக வாக்குவாதம் செய்தார். அவரை கோலி வம்புக்கு இழுத்ததால் ஆத்திரம் அடைந்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். இந்த வாக்குவாதத்தால் சில நிமிடங்கள் சலசலப்பு நிலவியது. பரிசளிப்பு நிகழ்வின்போது விராட் கோலி கோபத்துடன் காணப்பட்டார். இந்த மோதல் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

    காம்பீரும், விராட்கோலியும் இது மாதிரி மோதிக் கொள்வது இது முதல்முறையில்லை. டெல்லியை சேர்ந்த இருவரும் பலமுறை இது மாதிரி ஆக்ரோஷமான வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

     

    இந்த நிலையில் விராட் கோலி, கம்பீர் வாக்குவாதம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி ஒரு ஜாம்பவான், இது போன்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது. விராட் மற்றும் கம்பீருக்கு இடையேயான வாக்குவாதம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.

    2008-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது ஸ்ரீ சாந்தை கன்னத்தில் அறைந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன்.

    என கூறியுள்ளார்.

    • அவர் பேட்டிங்கில் கொஞ்சம் மேலே இறக்கப்படுவார்.
    • பவுலிங்கிலும் அவரது 4 ஓவர்கள் மிக முக்கியமாக இருக்கும்.

    ஐபிஎல் 16-வது சீசன் இன்று தொடங்குகிறது. அகமதாபாத்தில் நடக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

    இந்நிலையில், இந்த சீசனில் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசியதாவது:-

    இந்த சீசனில் நான் பார்க்க ஆவலாக இருக்கும் வீரர் ரவீந்திர ஜடேஜா. அவர் சிஎஸ்கேவிற்காக எப்படி பேட்டிங் ஆடப்போகிறார் என்பதை பார்க்க விரும்புகிறேன்.

     

    அவர் பேட்டிங்கில் கொஞ்சம் மேலே இறக்கப்படுவார். பவுலிங்கிலும் அவரது 4 ஓவர்கள் மிக முக்கியமாக இருக்கும். இப்போதைய சூழலில் சர்வதேச கிரிக்கெட்டில் ஜடேஜாவை விட சிறந்த ஆல்ரவுண்டர் யாருமே இல்லை.

    என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அபாரமாக பேட்டிங் ஆடி செம ஃபார்மில் இருக்கிறார் ஜடேஜா. எனவே சிஎஸ்கே அணிக்காக அவர் எப்படி ஆடப்போகிறார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    ×