search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசியலில் இருந்து விலகும் பா.ஜ.க. எம்.பி. கவுதம் கம்பீர்
    X

    அரசியலில் இருந்து விலகும் பா.ஜ.க. எம்.பி. கவுதம் கம்பீர்

    • கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றதும் பாரதிய ஜனதாவில் இணைந்தார்.

    புதுடெல்லி:

    டெல்லி கிழக்கு மாநில பா.ஜ.க. எம்.பி. கவுதம் கம்பீர் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "வரவிருக்கும் கிரிக்கெட் பொறுப்புகளில் கவனம் செலுத்துவதற்காக, எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

    மேலும், மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்" என கூறியுள்ளார்.

    முன்னதாக, ஐ.பி.எல்-லில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகளில் கவனம் செலுத்துவதற்காக இம்முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

    கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றதும் பாரதிய ஜனதாவில் இணைந்தார். பாஜகவும் உடனடியாக அவருக்கு 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×