search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பசவராஜ் பொம்மை பா.ஜனதாவினருக்கு மட்டும் முதல்-மந்திரியா?: சித்தராமையா கேள்வி
    X

    பசவராஜ் பொம்மை பா.ஜனதாவினருக்கு மட்டும் முதல்-மந்திரியா?: சித்தராமையா கேள்வி

    • பசவராஜ் பொம்மை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கூறுவது போல் செயல்படுகிறார்.
    • கொலையாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்ய வேண்டும்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தட்சிண கன்னடாவில் சமீப காலமாக நடைபெற்று வரும் கொலைகளுக்கும், சங்பரிவார் அமைப்புகளின் உள் விவகாரங்களுக்கும் தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. இதையும் மனதில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும். கொலையான பிரவீன் நெட்டார் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள வந்த பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், மந்திாி சுனில்குமார் ஆகியோருக்கு எதிராக அங்கு இருந்தவர்கள் பொங்கி எழுந்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். இதற்கான காரணத்தையும் போலீசார் கண்டறிய வேண்டும்.

    நளின்குமார் கட்டீல் கார் டிரைவராக பிரவீன் நெட்டார் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு அந்த பணியை அவர் கைவிட்டுள்ளார். அவர் நளின்குமார் கட்டீலை விட்டு விலகி சென்றது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தினால் கொலையாளிகள் யார் என்பதை கண்டறிய முடியும். இந்துக்கள் இறந்தால் முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம்கள் இறந்தால் இந்துக்கள் மீதும் சந்தேகப்படுவது வழக்கமாகிவிட்டது.

    இதே நோக்கத்தில் விசாரணை நடத்தினால் கொலைக்கான உண்மை காரணம் மூடி மறைக்கப்பட்டுவிடும். கொலையாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஏதாவது அமைப்புகள் சட்ட விரோதமாக செயல்பட்டால் அவற்றை தடை செய்யவும் திடமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தட்சிண கன்னடா மாவட்டத்தில் பின்தங்கிய சாதி அதிலும் பில்லவ சமூகத்தை சேர்ந்த இளைஞர்களே மத பிரச்சினையில் பலியாகி வருகிறார்களே ஏன்?.

    பசவராஜ் பொம்மை பா.ஜனதா தொண்டர்களுக்கு மட்டும் முதல்-மந்திரியா? அல்லது ஒட்டுமொத்த 6 கோடி கன்னடர்களுக்கு முதல்-மந்திரியா? என்பதை கூற வேண்டும். பிரவீன் நெட்டார் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய முதல்-மந்திரி மசூத் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறாதது ஏன்?. பசவராஜ் பொம்மை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கூறுவது போல் செயல்படுகிறார்.

    இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×