search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுமியைக் கடித்த ஜெர்மன் ஷெப்பர்டு - வீடியோ வைரல்
    X

    சிறுமியைக் கடித்த ஜெர்மன் ஷெப்பர்டு - வீடியோ வைரல்

    • வளர்ப்பு நாய் திடீரென சைக்கிள் ஓட்டிய சிறுமி மீது பாய்ந்து கடித்தது.
    • பாதுகாவலர் ஓடிச்சென்று நாயிடம் இருந்து சிறுமியை காப்பாற்ற உதவினார்.

    உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் அஜ்னாரா இன்டக்ரிட்டி ஹவுசிங் சொசைட்டி சாலை பகுதியில் 6 வயது சிறுமி சைக்கிள் ஓட்டி சென்று கொண்டு இருந்தார். அவருடன் சிறுமியின் தாய் நடந்து சென்றார்.

    அப்போது ஜெர்மன் ஷெப்பர்ட் வளர்ப்பு நாய் ஒன்றுடன் இளம்பெண் ஒருவர் அந்த வழியாக சென்று கொண்டிருந்தார்.

    இந்நிலையில் அந்த வளர்ப்பு நாய் திடீரென சைக்கிள் ஓட்டிய சிறுமி மீது பாய்ந்து கடித்தது. உடனே அந்த நாயின் உரிமையாளரான இளம் பெண் கயிற்றை இழுத்து நாயை கட்டுப்படுத்த முயன்றார். மேலும் அந்த நாய் மீண்டும் கடிக்க பாய்ந்தது.



    அப்போது அங்கு நின்ற சிறுமியின் தாய் ஓடி வந்து நாயை விரட்டி மகளை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் நாயை கட்டுப்படுத்த முடிய வில்லை. பின்னர் இதை கவனித்த அப்பகுதி பாதுகாவலர் ஒருவர் ஓடிச்சென்று அந்த நாயிடம் இருந்து சிறுமியை காப்பாற்ற உதவினார்.

    இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.




    இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் நமிதா சவுகான் காசியாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.அதில் சிறுமியை கடித்த நாய்க்கு முகமூடி அணிந்திருக்க வில்லை என்றும் அவர் தனது புகாரில் கூறி உள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காசியாபாத்தில் தற்போது நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    Next Story
    ×