search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் ஆம் ஆத்மி அனைத்து இடங்களிலும் போட்டி: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
    X

    டெல்லியில் ஆம் ஆத்மி அனைத்து இடங்களிலும் போட்டி: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

    • மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டி என மம்தா பானர்ஜி ஏற்கனவே அறிவித்துள்ளார்.
    • பஞ்சாப் மாநிலத்தில் தனித்து போட்டி எனத் தெரிவித்த ஆம் ஆத்மி தற்போது டெல்லியிலும் தனித்து போட்டி என அறிவிப்பு

    பிரதமர் மோடியை வீழ்த்துவதற்காக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியது.

    தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையில் இழுபறி நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கும் மம்தா பானர்ஜி கட்சிக்கும் இடையில் வேறுபாடு நிலவ, மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிஸ் கட்சி அனைத்து இடங்களிலும் போட்டியிடும் என மம்தா பானர்ஜி அறிவித்தார்.

    பஞ்சாப் மற்றும் டெல்லி மாநிலங்களில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    டெல்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஏழுக்கு ஏழு எனக் கொடுக்க முடிவு செய்துவிட்டர்ன். நாங்கள் தனித்து போட்டியிட வேண்டும் என்பது மக்களின் விருப்பம். பஞ்சாப் மாநிலத்தில் பகவத் மானின் கையை வலுப்படுத்த 13-க்கு 13 என மக்கள் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசு மற்றும் கவர்னருக்கு பஞ்சாப் மாநிலத்திற்கான நிதியை நிறுத்தும் தைரியம் வராது.

    இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது பஞ்சாப் மற்றும் டெல்லி மாநிலங்களிலும் இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

    இந்த மூன்று மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய சிக்கல் இருக்க வாய்ப்பில்லை. உத்தர பிரதேச மாநிலத்தில் தொகுதி பங்கீடு நடைபெற்று முடிந்துள்ளது.

    பீகாரில் லாலு கட்சியுடன் சுமுக பேச்சுவார்த்தையில் முடிந்துவிடும். அதேபோல் மகாராஷ்டிரா மாநிலதிலும் உத்தவ் தாக்கரே, சரத் பவார், காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பிரச்சனையில்லாமல் முடிய வாய்ப்புள்ளது.

    Next Story
    ×