search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சரத்பவார்
    X
    சரத்பவார்

    சரத்பவாரின் பேச்சை சித்தரித்து வீடியோ வெளியிட்ட பாஜக: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் விமர்சனம்

    சித்தரிக்கப்பட்ட வீடியோவை பதிவேற்றிய விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் பா.ஜனதாவை விமர்சித்து உள்ளது.
    மராட்டிய மாநில பா.ஜனதா டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் சரத்பவார் பேசும் வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. மேலும் அந்த வீடியோவுடன், "நாத்திகர் சரத்பவார் எப்போதும் இந்து மதத்தை வெறுக்கிறார். இதுபோன்ற நிலைப்பாட்டை எடுக்காமல் அவரால் அரசியலில் இந்த நிலையை சாதித்து இருக்க முடியாது" என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் பா.ஜனதா பதிவேற்றிய அந்த வீடியோ சித்தரிக்கப்பட்டது, உண்மையானது அல்ல என பல நெட்டிசன் சுட்டிக்காட்டினர். மேலும் உண்மையான வீடியோவில் சரத்பவார் ஜவஹர் ரதோட்டின் கவிதையை மட்டுமே குறிப்பிட்டு பேசுவார் எனவும் கூறினர்.

    இந்தநிலையில் சித்தரிக்கப்பட்ட வீடியோவை பதிவேற்றிய விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் பா.ஜனதாவை விமர்சித்து உள்ளது.

    இது குறித்து மந்திரி ஜித்தேந்திர அவாத் கூறுகையில், "மராட்டியம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மக்களை அடிமைப்படுத்திய மரபுகளை மீறும் பாரம்பரியம் கொண்டது. சரத்பவாரை விமர்சிக்கும் முன் இதை நீங்கள் மறக்க கூடாது" என கூறியுள்ளார். இதேபோல காங்கிரசை சேர்ந்த சச்சின் சாவந்த், "மனுவை பின்பற்றுபவர்கள் பல துறவிகள் பிற்போக்குத்தனமான மத பழக்கங்களை எதிர்த்ததை புரிந்து கொள்ள மாட்டார்கள். துக்காராம், ஜனாபாய் போன்ற துறவிகள் பல மரபுகளை வெளிப்படையாக எதிர்த்தனா்" என கூறியுள்ளார்.
    Next Story
    ×