என் மலர்

  இந்தியா

  தற்கொலை செய்துக் கொண்ட பெண் மற்றும் கல்வித்துறை அமைச்சர்
  X
  தற்கொலை செய்துக் கொண்ட பெண் மற்றும் கல்வித்துறை அமைச்சர்

  மத்தியப் பிரதேச மாநிலக் கல்வித்துறை அமைச்சரின் மருமகள் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  மத்தியப் பிரதேச மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மாரின் மருமகள் ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  இதுகுறித்து அவந்திபூர படோடியா காவல் நிலையப் பொறுப்பாளர் பிரதீப் வஸ்கலே கூறியதாவது:-

  அமைச்சர் இந்தர் சிங் பர்மாரின் மகன் வேராஜ் ப்ரமார். இவரது மனைவி சவிதா பர்மர் (22). போச்சனேர் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு 9 மணியளவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

  இறப்பிற்கான காரணம் தெளிவாக இல்லை.  இருப்பினும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெண்ணின் இறுதிச் சடங்குகள் போச்சனர் கிராமத்தில் நடைபெறுகிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இவரது மறைவுக்கு ஷாஜாபூர் மாவட்ட ஊடகப் பொறுப்பாளர் விஜய் ஜோஷி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  இதையும் படியுங்கள்.. போலீசார் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு- கடலூரில் பரபரப்பு
  Next Story
  ×