search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முதல் மந்திரி நிதிஷ்குமார்
    X
    முதல் மந்திரி நிதிஷ்குமார்

    நிதிஷ்குமார், பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று

    பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலைக்கு நேற்றைய நிலவரப்படி புதிதாக 1,79,723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். 

    இந்நிலையில், பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து அவர் வீட்டுத்தனிமையில் உள்ளார் என முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது. 

    கடந்த வாரம் திங்கட்கிழமை நிதிஷ்குமார் ஜனதா தர்பார் என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இந்த நிலையில் நிதிஷ்குமாருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

    இதேபோல், கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். எனது உடல் நிலை நலமாக உள்ளது. தற்போது வீட்டுத்தனிமையில் உள்ளேன் என முதல் மந்திரி பசவராஜ் பொம்மை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×