search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நரேந்திரசிங் தோமர் - அமித்ஷா சந்திப்பு
    X
    நரேந்திரசிங் தோமர் - அமித்ஷா சந்திப்பு

    உள்துறை மந்திரி அமித்ஷா வேளாண்மந்திரி நரேந்திரசிங் தோமர் சந்திப்பு

    விவசாயிகள் போடாட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷாவை வேளாண்மந்திரி நரேந்திரசிங் தோமர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில் எல்லையில் விவசாயிகள் இன்று 18-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதுவரை மத்திய அரசுடன் நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்ததை அடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரமாக்கியுள்ளனர்.

    விவசாயிகள் ஏற்கனவே டெல்லியை பிற மாநிலங்களுடன் இணைக்கும் 4 முக்கிய சாலைகளை முற்றுகையிட்டு இருந்தனர். இதன் காரணமாக உத்தரபிரதேசம், அரியானா மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வருவதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இன்றைய போராட்டத்தின்போது ஆக்ராவில் இருந்து டெல்லி வரும் சாலையையும் விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான டிராக்டர்களை அந்த சாலையில் கொண்டு வந்து விவசாயிகள் நிறுத்தினார்கள். 

    இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்த சாலை உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லி வரும் மிக முக்கிய சாலைகளில் ஒன்றாகும். எனவே டெல்லியில் போக்குவரத்து பல இடங்களில் ஸ்தம்பித்தது.

    இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷாவை வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் இன்று சந்தித்தார். 

    இந்த சந்திப்பின்போது விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக உள்துறை மந்திரியிடம் வேளாண் மந்திரி ஆலோசனை நடத்தினார்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது மத்திய மந்திரி சோம் பிரகாஷும் உடன் இருந்தார்.வேளாண் போராட்டத்தில் மாவோயிஸ்டுகளும், நக்சலைட்டுகளும் ஊடுருவி விட்டனர் என உள்துறை அமைச்சகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த மத்திய மந்திரிகளுக்கு இடையேயான இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. 
    Next Story
    ×