search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் சட்டங்கள்"

    விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படுமென மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் இன்று தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதை அடுத்து பிரதமர் மோடி இந்த வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற போவதாக அறிவித்தார் ஆனால் விவசாயிகள் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

     

    பிரதமர் மோடி

    இந்த நிலையில் நாளை மறுநாள் (29-ந் தேதி) பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதன் முதல் நாளில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படுமென மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் இன்று தெரிவித்தார்.

    இதையும் படியுங்கள்... ஜெயலலிதா வீட்டு சாவியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்- கலெக்டரிடம் தீபா, தீபக் மனு

    வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடைமுறை வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
    புதுடெல்லி:

    விவசாயிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக, 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்டார். சட்டங்களை ரத்து செய்வதற்கான நடைமுறை வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்றும் கூறினார். அதன்படி 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கான மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் முடிவில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நவம்பர் 29ம் தேதி தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படுகின்றன.

    வேளாண் வருவாயை பெருக்குவதற்கு அரசாங்கமும் விவசாய சங்க தலைவர்களும் வேறு வழியை யோசிக்க வேண்டும் என நிபுணர் குழு உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    புதுடெல்லி:

    வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்தபிறகும், விவசாயிகள் போராட்டத்தை திரும்ப பெறவில்லை. அத்துடன் கூடுதல் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். குறிப்பாக, குறைந்தபட்ச ஆதரவு விலையில் வேளாண் விளைபொருள்களைக் கொள்முதல் செய்வதற்கு, சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இந்த விஷயத்தில் அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை. 

    வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் விவசாய அமைப்புகளுக்கு இடையே பல கட்டங்களாக நீடித்த பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில், பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்ல நான்கு பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திருந்தது. 

    அந்த அமைப்பில் இடம்பெற்ற அனில் கன்வத் இதுபற்றி கூறுகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான சட்டம் இயற்றப்பட்டால் இந்தியா நெருக்கடியை சந்திக்கும் என்றார்.

    ‘வேளாண் வருவாயை பெருக்குவதற்கு அரசாங்கமும் விவசாய சங்க தலைவர்களும் வேறு வழியை யோசிக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு தீர்வு அல்ல. இது விவசாயிகளுக்கு மட்டுமின்றி, வியாபாரிகளுக்கும், இருப்பு வைக்கும் மொத்த வியாபாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என கன்வத் தெரிவித்தார்.
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் என தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

    அதன்படி இன்று காலை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தொங்கியது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கிய இந்த கூட்டத்தில், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது உயிரிழந்த விவசாயிகளுக்கு ஒருநிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அதன்பின், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தீர்மானத்தின் முழு விவரம்:

    உயிர்தியாகம் செய்த விவசாயிகளுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி

    ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடும் குளிரிலும், அடக்குமுறையிலும் துணிச்சலாக நின்று போராடி அச்சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற பிரதமர் அறிவிப்பிற்குப் பின்னணியாக இருக்கும் உயிர் தியாகம் செய்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இந்தக் கூட்டம் ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து நின்று அஞ்சலி செலுத்துகிறது.

    குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய மசோதாவை தாக்கல் செய்க

    குறைந்த பட்ச ஆதார விலையே இல்லாத மூன்று வேளாண் சட்டங்களை முதலில் அவசரச் சட்டங்களாகவும், பிறகு மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் கொண்டு வந்தபோது தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறார் மு.க. ஸ்டாலின். தொடர்ந்து எதிர்த்து- மாநிலத்தில் தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.

    அகில இந்திய அளவில் எதிர்கட்சிகளுடன் இணைந்து போராட்டங்களில் பங்கேற்று விவசாயிகள் போராட்டத்திற்கு துவக்கத்திலிருந்தே ஆதரவு தெரிவித்து வருகிறது தி.மு.க. இந்தச் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று இடைக்காலத் தடை பெற்றது தி.மு.க.. தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுடன் இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தியது தி.மு.க.

    வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மறுநாளே - அந்தச் சட்டங்களை எதிர்த்து வாக்களித்ததோடு மட்டுமின்றி - 23.9.2020 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் போட்டு - தமிழ்நாடு முழுவதும் அறப்போராட்டம் அறிவித்து - நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் காஞ்சிபுரத்தில் பங்கேற்று முழங்கினார் மு.க. ஸ்டாலின்.

    அனைத்துக் கூட்டணிக் கட்சி தலைவர்களை அழைத்து கூட்டம் போட்டு - இந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் - 5.12.2020 அன்று கருப்புக் கொடி ஏந்தி ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் 30.11.2020 அன்று கூட்டறிக்கை வெளியிட்டு - மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும், 8.12.2020 அன்று அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு அறிவித்த நாடு தழுவிய போராட்டத்தில் பங்கேற்பது என்றும் அறிவித்து - அவ்வாறே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அகில இந்திய அளவில் 20-க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகளுடன் இணைந்து 9.12.2020 அன்று குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து “மூன்று வேளாண் சட்டங்களையும் அரசை திரும்ப பெற அறிவுறுத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தது. 18.12.2020 அன்று மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கூட்டணிக் கட்சியினர் சார்பில் ஒரு நாள் உண்ணாவிரத அறப்போராட்டம் இருந்து இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தப்பட்டது.

    பஞ்சாப், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் போட்ட நிலையில் - தமிழ்நாட்டிலும் அப்படியொரு தீர்மானம் போட வேண்டும் என்று வலியுறுத்தி 1.1.2021 அன்று, அன்றைய தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார் ஸ்டாலின். அனைத்து கூட்டணிக் கட்சியினரை அழைத்துப் பேசி - அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு தீர்மானம், ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தினாலும் அச்சட்டங்களைத் திரும்ப பெறவில்லை என்பதால் - தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தார்.

    கலந்து கொண்ட எம்.பி.க்கள்

    அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 28.8.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சராக - ஸ்டாலினே தீர்மானத்தை முன்மொழிந்து “மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுக” என வலியுறுத்தும் அந்த தீர்மானத்தை நிறைவேற்றினார் என்பதை இந்தக் கூட்டம் நன்றியுணர்வுடன் பதிவு செய்கிறது.

    வழக்குகள், கண்ணீர் புகை குண்டுகள், தடியடி, போராட்டத்திற்குள் காரை விட்டு கொன்றது என தங்கள் போராட்டத்தை நோக்கி வந்த அனைத்து அராஜாகத்தையும் - கண் மூடித்தனமான அடக்குமுறைகளையும் - முள் வேலிகளையும் - தைரியமாக எதிர்த்து நின்று - இந்திய விவசாயப் பெருங்குடி மக்கள் “அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு” பின்னால் நின்று, அவர்கள் நடத்தி வந்த போராட்டத்திற்கு தி.மு.க. தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது. அந்த ஆதரவு எதிர்கட்சியாக இருந்த போதும் - ஆளுங்கட்சியான பிறகும் தொடர்ந்தது.

    இந்நிலையில், 15 மாதங்களுக்கு மேலாக மவுனம் சாதித்த பிரதமர் அவர்களுக்கு விவசாயிகளின் பலத்தை உணர்த்தி - இந்த நாட்டின் முதுகெலும்பான விவசாயப் பெருங்குடி மக்களுக்கு எதிரான இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவது என்ற பிரதமரின் அறிவிப்பினை அறவழிப் போராட்டம் மூலம் வெளியிட வைத்த விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இந்தக் கூட்டம் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.

    அறிவிப்பினை முன்னெடுத்துச் சென்று,  நாடாளுமன்றத்தின் வருகின்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கும் முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் அறிவிப்பை - சட்டமாக நிறைவேற்றிட வேண்டும் என்று இந்தக் கூட்டம் ஒன்றிய பா.ஜ.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

    மூன்று வேளாண் விரோத சட்டங்களை பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் சட்டமாக்க முடியும். அதுபோன்ற தந்திரத்தை பா.ஜ.க. செய்யாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மோடி அரசு மூன்று வேளாண் விரோத சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக அறிவித்திருப்பது விவசாயிகளின் வரலாறு காணாத போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி!. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்திய விவசாயிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம். விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிய காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளும் இதர  ஜனநாயக சக்திகளும் பாராட்டுக்குரியவர்களாவர்.

    மோடி அரசு கொண்டுவந்த வேளாண் விரோத சட்டங்கள் மூன்றையும் விவசாயிகள் கடந்த ஓராண்டு காலமாக எதிர்த்துப் போராடி வந்தனர். அவர்களை திசை திருப்புவதற்கு மோடி அரசு பல தந்திரங்களைக் கையாண்டு பார்த்தது. உச்ச நீதிமன்றத்தைப் பயன்படுத்தி இந்த சட்டங்களை தற்காலிகமாக கிடப்பில் போட்டுப் பார்த்தது. அதற்கு விவசாயிகள் ஏமாறவில்லை. போராட்டங்களை நிறுத்தவில்லை. அதன்பிறகு வன்முறையைப் பயன்படுத்தி இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று முயற்சித்தது. அதனுடைய வெளிப்பாடுதான் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது காரை ஏற்றிப் படுகொலை செய்த கொடூரமாகும். அதன் பிறகும் கூட விவசாயிகள் அஞ்சவில்லை. அதன் பின்னர் தங்களுடைய வழக்கமான பாணியில் போராடும் விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்றும், தேசவிரோதிகள் என்றும் பிரச்சாரம் செய்து பார்த்தது. அதுவும் மக்களிடம் எடுபடவில்லை.

     அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் படுதோல்வி அடைந்த காரணத்தாலும் பஞ்சாபிலும் உத்தர பிரதேசத்திலும் அடுத்து நடைபெறப்போகும் சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வி உறுதி என்பது தெரிந்ததாலும் இப்போது மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இது விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றிதான். என்றாலும் மோடியின் தந்திரத்துக்கு நாம் பலியாகிவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மோடி அரசு இந்த சட்டத்தை திரும்பப் பெறுவது விவசாயிகளின் போராட்டங்களுக்கு மதிப்பளித்து அல்ல, சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அது ஆடும் நாடகம்தான் இது. எனவே, விவசாயிகள் மோடியின் இந்த நாடகத்தைக் கண்டு ஏமாந்து விடக்கூடாது.

    2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததுமே விவசாயிகள் மீதுதான் முதல் தாக்குதலை மோடி அரசு தொடுத்தது. காங்கிரஸ் ஆட்சியின்போது இயற்றப்பட்ட 'நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை' நீர்த்துப் போகச் செய்வதற்கு அதில் 15 திருத்தங்களை மோடி அரசு கொண்டு வந்தது. அந்த சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றினாலும் மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை. மூன்று முறை அவசர சட்டமாக அதைப் பிறப்பித்த மோடி அரசு வேறு வழியில்லாமல் 2015-ம் ஆண்டில் அந்த சட்டத் திருத்த மசோதா காலாவதியாக விட்டது.

    ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அந்த சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்துவிட்டது. அதைப்போலவே பா.ஜ.க.-வின் பதிலியாக மாறிவிட்ட அதிமுகவும் அந்த சட்டத் திருத்தங்களை தமிழ்நாட்டில் நிறைவேற்றியது. அதன் அடிப்படையில்தான் சேலம் எட்டு வழி சாலை நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கையை எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டார். இவற்றை நாம் மறந்துவிடக்கூடாது. 

    கோப்புப்படம்

    அப்போது செய்தது போலவே இப்போதும் இந்த மூன்று வேளாண் விரோத சட்டங்களை பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் சட்டமாக்க முடியும். அது போன்ற தந்திரத்தை பா.ஜ.க.  செய்யாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே நாம் தொடர்ந்து விழிப்போடு இருக்க வேண்டியது அவசியமாகும்.

    பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் பா.ஜ.க.-வை தோற்கடிப்பதன் மூலமே இந்த நாட்டை மக்கள் விரோத, பிரிவினைவாத சனாதன சக்திகளிடமிருந்து காப்பாற்ற முடியும். எனவே விவசாயிகளும், ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு உறுதியேற்போம்.

    இவ்வாறு திருமாவளவன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
    கருப்பு சட்டத்தினால் 700 விவசாயிகள் தங்களது உயிரை இழந்துள்ளனர் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
    குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

    வேளாண் சட்டங்களின் பயன்களை ஒரு தரப்பினருக்கு புரிய வைக்க முடியவில்லை என்றும், விவசாயிகள் நலன் முக்கியம் எனவும் தெரிவித்தார்.

    மோடி அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பாராட்டுவதற்கு முன் விமர்சனத்தையும் முன் வைக்கின்றனர்.

    அந்த வகையில் எ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி தனது கருத்தை தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது குறித்து அசாதுதீன் கூறியிருப்பதாவது:

    முதல் நாளில் இருந்தே மூன்று வேளாண் சட்டங்களும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று எதிர்கட்சிகள் சொல்லிக்கொண்டு வந்தன. மோடி அரசு இதுபோன்ற சட்டங்களை உருவாக்க, மோடி அரசுக்கு அரசியலமைப்பு உரிமை இல்லை. மோடியின் ஈகோவை திருப்தி படுத்தவே இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த கருப்பு வேளாண் சட்டங்களால் 700 விவசாயிகள் தங்களது உயிர்களை இழந்துள்ளனர்.

    மோடி தனது ஈகோவை ஒதுக்கி வைத்திருந்தால், இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்காது. விவசாயிகள் உயிர் இழந்திருக்கமாட்டார்கள். இது மிகவும் காலதாமதமான முடிவு. பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும்போது இந்த அரசு பயப்படும் என்று நான் எப்போதுமே கூறுவேன். இந்த வெற்றி அனைத்து விவசாயிகளுக்கும் உடையதாகும்.

    இவ்வாறு ஒவைசி தெரிவித்துள்ளார்.
    ×