search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சரவை  கூட்டம் (கோப்பு படம்)
    X
    அமைச்சரவை கூட்டம் (கோப்பு படம்)

    வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்?

    வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடைமுறை வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
    புதுடெல்லி:

    விவசாயிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக, 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்டார். சட்டங்களை ரத்து செய்வதற்கான நடைமுறை வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்றும் கூறினார். அதன்படி 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கான மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் முடிவில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நவம்பர் 29ம் தேதி தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படுகின்றன.

    Next Story
    ×