search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    எனது எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    கொரோனா பரவல் மற்றும் பொருளாதாரம் பற்றி எச்சரித்தேன். அவர்கள் (மத்திய அரசு) அதை புறக்கணித்ததால், பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
    புதுடெல்லி :

    கொரோனா பரவல் மற்றும் சீனாவுடனான லடாக் எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் நடவடிக்கையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குறை கூறி வருகிறார்.

    இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 49 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், 740 பேர் மரணம் அடைந்து உள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.

    இதையொட்டி ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், “கொரோனா பரவல் மற்றும் பொருளாதாரம் பற்றி எச்சரித்தேன். அவர்கள் (மத்திய அரசு) அதை புறக்கணித்ததால், பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சீனா பற்றியும் எச்சரிக்கிறேன். அதையும் அவர்கள் புறக்கணிக்கிறார்கள்” என்று கூறி உள்ளார்.
    Next Story
    ×