search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா
    X
    சித்தராமையா

    கொரோனா தடுப்புக்கான உபகரணங்கள் கொள்முதல் விவரங்களை வெளியிட வேண்டும்: சித்தராமையா

    கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதல் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் மாநில அரசு கொள்முதல் செய்த கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ததில் ரூ.2,200 கோடி முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஏற்கனவே குற்றம்சாட்டியுள்ளார். அவ்வாறு எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு பதிலளித்துள்ளார். இந்த நிலையில் சித்தராமையா 6 கேள்விகளை கேட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களை அரசு கொள்முதல் செய்துள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளது. கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதல் குறித்த விவரங்களை அரசு வெளியிட வேண்டும். அதாவது கொரோனா பரவிய நாளில் இருந்து அதை தடுக்க அரசு இதுவரை செய்த செலவு எவ்வளவு?, இதில் மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது?, எந்தெந்த துறை எவ்வளவு செலவு செய்துள்ளது?, உடல் கவச உடைகள், பரிசோதனை கருவிகள், கையுறை, சானிடைசர் திரவம், தெர்மல் ஸ்கேனர் கருவி ஆகியவற்றின் சந்தை விலை எவ்வளவு, நீங்கள் கொள்முதல் செய்த விலை எவ்வளவு?.

    கொரோனா நெருக்கடியால் சிக்கி தவித்த ஏழை மக்களுக்கு எத்தனை உணவு தானிய தொகுப்பு மற்றும் உணவு பாக்கெட்டை வழங்கியுள்ளர்கள்?, அவை ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு செலவு செய்துள்ளர்கள்? என்பது குறித்து கணக்கு விவரங்களை வழங்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும்போது, எத்தனை உணவு பொட்டலங்களை வழங்குனீர்கள்?, அவற்றுக்கு செய்த செலவு எவ்வளவு?.

    மத்திய-மாநில அரசுகள் ஏழை மக்களுக்கு தொகுப்பு திட்டங்கள் என்ன, இதுவரை எவ்வளவு பேருக்கு அவை வழங்கப்பட்டுள்ளது?. கொரோனா நெருக்கடியின்போது சிக்கித்தவித்த தொழிலாளர்களை தங்கவைக்க எவ்வளவு செலவு செய்யப்பட்டது? என்பது குறித்த முழு விவரங்களை அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.
    Next Story
    ×