search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா
    X
    பிரியங்கா

    கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்- மத்திய அரசுக்கு பிரியங்கா வலியுறுத்தல்

    நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டுமென மத்திய அரசை பிரியங்கா வலியுறுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:


    இந்தியாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    இந்தநிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகளை மேலும் அதிக அளவில் மேற்கொள்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரபிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வதேரா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகளை நாடு முழுவதும் அதிகரிப்பதன் மூலமாகவே வைரஸ் பரவலின் தீவிரத்தன்மை, அது பரவும் இடங்கள், வைரஸ் தொற்றின் மையப்புள்ளி ஆகியவற்றை கண்டுபிடிக்க முடியும்.

    எனவே தற்போது கொரோனா பரிசோதனைகளை உடனடியாக அதிகரிப்பதற்கான அவசியம் எழுந்துள்ளது. தற்போதையை ஊரடங்கு பயனுள்ளதாக அமைய பெரிய அளவில் பரிசோதனைகளையும், தேவையான மருத்துவ உபகரணங்களையும் அதிகப்படுத்த வேண்டும்.

    மேலும் உத்தர பிரதேசத்தில் பண்டா என்ற இடத்தில் நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங் காமல் இருப்பது, அவர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்வது ஆகியவற்றை உத்தரபிரதேச அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

    இந்த நேரத்தில் அவர்களுக்கான அனைத்து ஒத்துழைப்பும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள். எனவே அவர்களை இந்த தேசத்தை காக்கும் வீரர்களை போல நாம் நடத்த வேண்டும்.

    இவ்வாறு பிரியங்கா வதேரா கூறியுள்ளார்.
    Next Story
    ×