search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷீரடி டிரஸ்டின் தலைமை அதிகாரி அருண் டோங்க்ரே
    X
    ஷீரடி டிரஸ்டின் தலைமை அதிகாரி அருண் டோங்க்ரே

    ஷீரடி கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் - பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் வேண்டுகோள்

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து, ஷீரடி கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இதற்கிடையே, சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து, ஷீரடி கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக, ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் அமைப்பின் தலைமை அதிகாரி அருண் டோங்க்ரே கூறுகையில், கொரோனா வைரஸ் குறித்த மத்திய அரசின் பரிந்துரையை பக்தர்கள் ஏற்க வேண்டும். எனவே, ஷீரடிக்கு பக்தர்கள் வருவதை சில நாள்கள் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    Next Story
    ×