search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "shirdi"

  • ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் கடவுள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
  • ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்தில் இறைவனை புரிந்து கொள்கிறான்.

  சாய்பாபா மக்களுக்கு உதவியது மட்டுமில்லாமல், மக்களுக்கு நல்ல அறிவுரைகளையும் கொடுத்துள்ளார்.

  ஓவ்வொரு மனிதனும் கடவுளை அடைவதற்கு முயற்சி செய்கிறான். அப்போது பல கட்டங்களை தாண்டிச் செல்கிறான்.

  மனிதன் உலகத்து பொருளின் மீது வைத்திருந்த ஆசையை அடக்கும் போது, அவன் முக்தி பெறுகிறான்.

  மனிதன் பந்தபாசத்தை தவிர்க்கும் போது, விரக்தி அடைகிறான்.

  மனிதன் ஆத்மாவை அறிந்து கொள்ளும் போது, அவன் தன்னைப் புரிந்து கொள்கிறான்.

  மனிதன் உணர்வுகளைத் துறக்கும் போது, அவன் விசர்ஜனம் பெறுகிறான்.

  மனிதன் உண்மையை நேசிக்கும் போது, அவன் தர்மத்தை கடைப்பிடிக்கிறான்.

  மனிதன் மற்றவர்களுக்காக வாழும் போது, அவன் முதிர்ந்த மனப்பக்குவத்தை அடைகிறான்.

  மனிதன் உடலையும் உள்ளத்தையும் அடக்கும் போது, அவன் தியானத்திலிருக்கிறான்.

  மனிதன் தூய எண்ணத்தோடு செயல்படும் போது, அவன் அமைதியை நாடுகிறான்.

  மனிதன் அமைதியான நிலையில் கடவுளை அடைவதற்கு ஒரு நல்ல குருவை தேடுகிறான்.

  மனிதனுக்கு நல்ல குரு கிடைத்தவுடன், அவன் விவேகத்தை பெற்று கடவுளோடு இணைகிறான்.

  மனிதன் என்பவன் உலகத்திலுள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவித்த பிறகு கடவுளை நாடுகிறான்.

  மனிதன் கடவுளை தேடும் போது அவனுக்குள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் உண்மையான மனிதனை அறிந்து கொள்கிறான்.

  இந்த உண்மையே மனிதனை கடவுளோடு இணைக்கிறது.

  ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் கடவுள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்தில் இறைவனை புரிந்து கொள்கிறான்.

  • அட்சயபாத்திரமாக விளங்கிய அந்த மண்பானையும் சீரடியில் இப்போதும் இருக்கிறது.
  • இந்நெருப்பில் இருந்து வரும் சாம்பல் “உதி” என்று அழைக்கப்பட்டது.

  பாபா பயன்படுத்திய எல்லாப் பொருட்களுமே முக்கியத்துவம் பெற்றுவிட்டன.

  அவைகளை ஆண்டவனின் காணிக்கைகளாக மக்கள் கருதுகின்றனர்.

  தமது வயலில் விளைந்த கோதுமையில் ஒரு மூட்டையை பாலாஜி படேல் நிவாஸ்கர் என்ற பக்தர் பாபாவிற்கு தருவார்.

  அதன் நினைவாக ஆண்டுதோறும் புதிதாக ஒரு மூட்டை கோதுமை வாங்குகிறார்கள்.

  அதனைக் கண்ணாடி பீரோவில் வைக்கிறார்கள்.

  கோலம்பா என்று ஒரு மண் பானை பாபா பிச்சை எடுத்து வந்த உணவை அதில் தான் போட்டு வைத்தார்.

  அட்சயபாத்திரமாக விளங்கிய அந்த மண்பானையும் சீரடியில் இப்போதும் இருக்கிறது.

  சாயிபாபா மூன்று வழக்கங்களைக் கடைபிடித்தார்.

  திருகையில் அரைப்பது, சங்கு ஊதுவது, மணியடிப்பது. இதுபோல் நெருப்பில் ஆகுதி செய்தல்,

  பஜனை, தண்ணீரால் சாயிபாபாவின் பாதத்தைக் கழுவி வழிபாடு செய்தல் போன்றவையும் அனுமதிக்கப்பட்டன.

  அவர் விறகை எப்போதும் எரியவிட்டுக் கொண்டிருக்கும் "துனி" எனும் புனித நெருப்பில் போட்டு வந்தார்.

  இந்நெருப்பில் இருந்து வரும் சாம்பல் "உதி" என்று அழைக்கப்பட்டது.

  அவரைக் காணவரும் பக்தர்கள் சீரடியை விட்டுச் செல்லும் போது உதி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

  • அவரை இந்துவா,முஸ்லீமா என யாரும் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
  • ஏனெனில் மசூதியை பாபா “துவாரகாமயி” என அழைப்பார்.

  துவாரகா மயியில் அன்று பாபாவால் மூட்டப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது.

  அந்நெருப்பு குண்டத்திலிருந்து எடுக்கப்படும் உதி இன்றும் பக்தர்களின் பிரசாதமாக விளங்குகிறது.

  துவாரகா மயி மசூதியில் சாய்பாபா சுமார் 60 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

  இதன் அருகில் உள்ள இடம் சாவடி என்றும் அழைக்கப்படுகிறது.

  ஒவ்வொரு நாள் இரவும் தனது பக்தர்களை இங்கு சந்திப்பார்.

  ஒரு முறை மசூதியில் விளக்கேற்ற வழக்கமாக எண்ணெய் தரும் வியாபாரி எண்ணெய் தர

  மறுத்துவிட்டதால் தண்ணீரிலேயே விளக்கெரிய வைத்தார்.

  அன்று முதல் அவரது புகழ் மேலும் பரவியது. ராமநவமி, சந்தனக்கூடு

  ஆகிய இந்து முஸ்லிம் விழாக்களை இவ்வூரில் நடத்தி வந்தார்.

  இந்து சடங்குகள் அந்த மசூதியில் செய்யப்பட்டு வந்தது.

  அவரை இந்துவா,முஸ்லீமா என யாரும் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

  ஏனெனில் மசூதியை பாபா "துவாரகாமயி" என அழைப்பார்.

  துனி எனும் அணையாத அக்னியை வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் உதி என்ற சாம்பலை'

  நோய் கண்டவர்களுக்கு கொடுத்து குணமாக்குவார்.

  சீரடியில் பாபா உடலுடன் இருந்த பொழுது துவாரகா மாயயில் மத்திய ஆரத்தி மட்டும் தான் நடந்து கொண்டிருந்தது.

  ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாபா சாவடியில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது சேஜ் ஆரத்தி,

  அடுத்த மறு நாள் காலையில் காகட ஆரத்தி நடந்து கொண்டிருந்தது.

  • முப்பத்தாறு வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து வந்தனர்.
  • அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம் சிலை செய்ய மிகவும் சிரமப்பட்டார்.

  பாபாவின் சமாதிக்கு முன்பு, அவரது பெரிய புகைப்படம் ஒன்றை வைத்து, ஆரத்தியுடன் நித்திய பூஜைகள், நடந்து வந்தன.

  விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும், பாபாவின் படத்தோடு ஊர்வலங்களும்,

  அன்னதானங்களும் விமரிசையாக நடந்தன.

  முப்பத்தாறு வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து வந்தனர்.

  அப்பொழுது ஒரு நாள் இத்தாலியில் இருந்து அருமையான, உயர்ந்த வகை வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது.

  அது அப்பொழுது எதற்கு வந்தது, என்று யாருக்கும் தெரியாது.

  அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை.

  உடனே துறைமுக அதிகாரிகள் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர்.

  இந்த விஷயம், ஷீர்டி சாயி சமஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது.

  உடனே அதை ஏலத்தில் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

  ஷீர்டி சாயிபாபா சிலை செய்வதற்காக ஏலம் எடுக்கப்படுவதை அறிந்து, பலரும் போட்டியில் இருந்து விலகினார்கள்.

  சாயி சமஸ்தான் அதிகாரிகள் அந்த கல்லை ஏலத்தில் எடுத்து அதை பம்பாயில் உள்ள

  பாலாஜி வஸந்த் தாலிம் என்னும் சிற்பியிடம் கொடுத்து பாபாவின் சிலையை செய்யச் சொன்னார்கள்.

  சிலை செய்ய மாதிரியாக, பாபாவின் கருப்பு வெள்ளை புகைப்படமே சாயி சமஸ்தான் அதிகாரிகளால் கொடுக்கப்பட்டது.

  அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம் சிலை செய்ய மிகவும் சிரமப்பட்டார்.

  அப்பொழுது பாபா சிற்பியின் கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித கோணங்களில் காட்டி

  சிற்பியின் கஷ்டத்தைப் போக்கி அவரை உற்சாகப்படுத்தினார்.

  சிற்பி பின்னர் தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக எல்லோரும் எதிர்பார்த்தது போல்,

  அனைவரும் திருப்தியுறும் வண்ணம் சிலையை மிகவும் அழகாக செய்து கொடுத்தார்.

  பின்னர் அந்த சிலை 1954ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7ம் தேதி பாபாவின் சமாதிக்கு முன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

  அந்த சிலையே இன்றளவும் தினமும் பல லட்சக்கணக்கான பக்தர்களால் அன்புடனும், பக்தியுடனும் வழிபடப்பட்டு வருகின்றது.

  • பாபா காலத்தில் ஏற்றப்பட்ட இந்த தீபம் இன்று வரையிலும் இடைவிடாது எரிந்து கொண்டிருக்கிறது.
  • ஒரே திரியிலேயே ஒளி வீசிக் கொண்டிருக்கிறது இந்த தீபம்.

  இதே வளாகத்தில் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கும் நந்தா தீபம் அதிசயமாக கருதப்படுகிறது.

  பாபா காலத்தில் ஏற்றப்பட்ட இந்த தீபம் இன்று வரையிலும் இடைவிடாது எரிந்து கொண்டிருக்கிறது.

  இந்த விளக்கிற்கு தினமும் கோவில் பூசாரிகள் எண்ணை ஊற்றுகிறார்கள்.

  விளக்கின் திரியை மட்டும் அவர் மாற்றுவதில்லை.

  ஒரே திரியிலேயே ஒளி வீசிக் கொண்டிருக்கிறது இந்த தீபம்.

  கோவிலின் இன்னொரு பகுதியில் அருங்காட்சியகம் உள்ளது.

  அங்கு பாபா பயன்படுத்திய ஆடை, பல்லக்கு, கோதுமை அரைப்பதற்கு பயன்படுத்திய கல், பாத்திரங்கள் மற்றும்

  அவரது அரிய புகைப்படங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

  உதி அளித்து, உபதேசம் செய்து, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அருள்புரிந்த பாபா,

  தான் கூறியபடியே தன் ஸ்தூல் உடல் மறைந்த பின்னும் இன்றும் அருள் புரிந்து வருகிறார்.

  அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கும், பாவங்கள் நீங்கப் பெற்றவர்களுக்கும் சீரடிபாபாவை வழிபடும் பேறு கிடைக்கிறது.

  உலகம் முழுவதும் இருந்து மக்கள் கூட்டம் சாயிபாபா இருக்கும் இடம் நோக்கி வருகிறார்கள்.

  சீரடி மண்ணை மிதித்தவர்களின் கஷ்டங்கள் விலகுகிறது. அவர்களது மனக்கவலைகள் மறைகின்றன.

  அவர்கள் குடும்பங்களில் மகிழ்ச்சி பெருகுகிறது.

  ஆனந்தம் பொங்குகிறது.

  இன்றும் லட்சோப லட்சம் குடும்பங்களில் சீரடிபாபா ஆனந்தத்தை பொங்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

  • தெய்வீக மகிமை நிறைந்த பாபா குழந்தைகளிடம் குழந்தையாகவே நடந்து கொண்டார்.
  • ஒரு தாயைப்போல ஏழைகளிடம் நடந்து கொண்டார்.

  ராதாகிருஷ்ணமாயி என்னும் பெண்மணி பாபாவின் இருப்பிடத்தை கவனித்துக் கொண்டதோடு, உணவும் சமைத்து வந்தார்.

  பாபாவைத் தேடி எத்தனை பக்தர்கள் வந்தாலும் அவர்கள் அனைவரும் வயிறார உண்ணும்படி அந்த உணவை பெருகச் செய்தார் பாபா.

  தெய்வீக மகிமை நிறைந்த பாபா குழந்தைகளிடம் குழந்தையாகவே நடந்து கொண்டார்.

  சிரிக்க சிரிக்கப் பேசி குழந்தைகளை மகிழச் செய்தார்.

  பாபா பஜனையையும், பாடல்களையும் விரும்பினார்.

  பக்தர்களிடம் பஜனைகளையும், பாடல்களையும் பாடும் படி உற்சாகமூட்டினார்.

  சில வேளைகளில் பாடல்களுக்கு தக்கபடி பாபா நடனமாடினார்.

  ஏழைகளின் துயரங்களை கண்டு மனம் பொறுக்காதவர் பாபா.

  ஒரு தாயைப்போல ஏழைகளிடம் நடந்து கொண்டார்.

  தொழு நோயாளிகள் மீது அவர் மிகுந்த இரக்கம் கொண்டிருந்தார்.

  அவர்களது உடலிலுள்ள புண்களை தன் கையாலேயே கழுவி அவர்களுக்கு மருத்துவம் செய்தார்.

  பாபா சாஸ்திரங்களையும் ஐயமறக் கற்று உணர்ந்திருந்தார்.

  பகவத் கீதை, குர்ஆன் போன்றவற்றின் சுலோகங்களுக்கு மிக அற்புதமான விளக்கங்கள் அளித்து பண்டிதர்களைக்கூட வியப்படையத் செய்தார்.

  பாபா மதங்களைக் கடந்து நின்றார்.

  துவாரகாமாயீ மசூதியில் பாபா வீற்றிருந்தார்.

  மக்கள் அவரை சாய் மஹராஜ் என்று போற்றி கொண்டாடினார்.

  பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நிஷ்டா (நம்பிக்கை) வும், ஸபூரி (பொறுமை)யும் ஆகும்.

  தன்னை நாடி வந்த நோயாளிகளுக்கெல்லாம் ஊதி(விபூதி) யையே பிரசாதமாகத் தந்து, அவர்களின் நோய்களை நீக்கியவர் பாபா.

  வாழ்வில் பொறுமையும், தன் மீது நம்பிக்கையும் கொண்ட அன்பர்களுக்கு அவர் எப்போதும் துணை நிற்கிறார்.

  • பாபாவின் அருளாலும் கருணையாலும் சீடர்கள் பலர் உருவானார்கள்.
  • ஒருநாள் பாபாவின் ஆற்றலை சோதிக்க எண்ணிய அவர்கள் எண்ணெய் தர மறுத்தனர்.

  பாபாவின் அருளாலும் கருணையாலும் சீடர்கள் பலர் உருவானார்கள்.

  அப்படி பாபா குருவாக உருவாகி குருவருள் பெற்று சீரடியில் வாழ்ந்து வந்தார்.

  பல ஆண்டுகள் ஒரு யோகியைப் போலவே வாழ்ந்த பாபா பிச்சை எடுத்தே சாப்பிட்டார்.

  தனது மகிமையால் நோயுற்றவர்களின் நோயை குணமாக்கினார்.

  பாபாவின் புகழ் சுற்றுவட்டாரங்களில் பரவத் தொடங்கியது.

  பல ஞானிகள் வந்து பாபாவைச் சந்தித்தனர்.

  அவர்கள் பாபாவின் தெய்வீகத் தன்மையை தாங்கள் அறிந்ததோடு அதை உலகிற்கும் எடுத்து கூறினர்.

  பாபா தான் தங்கியிருந்த துவாரகாமாயீ என்னும் மசூதியில் விளக்குகள் ஏற்றி வைப்பார்.

  இரு எண்ணெய் வியாபாரிகள் விளக்கிற்கான எண்ணெய் கொடுத்து வந்தனர்.

  ஒருநாள் பாபாவின் ஆற்றலை சோதிக்க எண்ணிய அவர்கள் எண்ணெய் தர மறுத்தனர்.

  பாபா தண்ணீரை ஊற்றி விளக்குகள் எரித்தார். இந்நிகழ்ச்சியால் பாபாவின் புகழ் அப்பகுதி முழுவதும் பரவியது.

  பாபாவைத் தேடி பக்தர்கள் வரத்தொடங்கினர்.

  • அகில இந்திய சாய் சமாஜத்தை நிறுவி அதன் மூலம் நாடு முழுவதும் பாபாவின் தத்துவம் பரவிட உழைத்தார்.
  • அவருடைய வரலாற்றைப் பற்றிய விஷயங்களைத் திரட்டி, நாட்டுக்கு வழங்கிய பெருமை அவரையே சாரும்.

  நாடு முழுவதும் சாய்பாபாவின் தத்துவம் தழைத்தோங்கவும், சாய்பாபா வழிபாடு சிறப்புற்றுத் திகழவும் வழிவகுத்தவர்,

  தமிழகத்தைச் சேர்ந்த பூஜ்ய ஸ்ரீநரசிம்ம சுவாமிஜி.

  அகில இந்திய சாய் சமாஜத்தை நிறுவி அதன் மூலம் நாடு முழுவதும் பாபாவின் தத்துவம் பரவிட உழைத்தார்.

  சாய்பாபா மகா சமாதி அடைந்து பல வருடங்களுக்குப் பிறகு, நாடு முழுவதும் பயணம் செய்து

  அவருடைய வரலாற்றைப் பற்றிய விஷயங்களைத் திரட்டி, அவற்றை சுவைபட தொகுத்து நாட்டுக்கு வழங்கிய

  பெருமை அமரர் நரசிம்ம சுவாமிஜியை சேரும்.

  • ஒரு காலத்தில் பூனா மற்றும் அகமத்நகர் மட்டுமே அறிந்திருந்த பாபாவை இன்று உலகமே அறிந்திருக்கிறது.
  • மனிதன் தன்னைத்தானே உணர்ந்து கொள்ள வேண்டும் என போதித்தார்.

  பாபாவின் வாழ்க்கையில், பாபாவின் தொடர்பில் இருந்த, அவருடன் ஒன்றிவிட்ட முக்கியமான சீடர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

  1.தாஸ்கணு மகாராஜ்,

  2.நாராயண கோவிந்த சந்தோர்க்கர்,

  3.ஹரிசீதாராம் தீட்சித்,

  4.உபசானி பாபா,

  5.கபர்தே,

  6.அன்னாசாகேப் தபோல்கர்.

  7.மஹல்சாபதி

  ஒரு காலத்தில் பூனா மற்றும் அகமத்நகர் மட்டுமே அறிந்திருந்த பாபாவை இன்று உலகமே அறிந்திருக்கிறது.

  நான் எல்லா உயிர்களிடமும் வாழ்கிறேன் கடவுளை அடைய சம்சாரத்தில் இருந்து விடுபட வேண்டும்.

  உலக விஷயங்களில் விரக்தி தோன்ற வேண்டும்.

  மனிதன் தன்னைத்தானே உணர்ந்து கொள்ள வேண்டும் என போதித்தார்.

  • பத்ரி க்ராம ஸமத் புதம்
  • த்வாரகா மாயீ வாசினம்

  பத்ரி க்ராம ஸமத் புதம்

  த்வாரகா மாயீ வாசினம்

  பக்தா பீஷ்டம் இதம் தேவம்

  ஸாயி நாதம் நமாமி