search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் இருந்து சீரடிக்கு 1,207 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்ற 82 வயது சாய்பாபா பக்தர்
    X

    சைக்கிள் பயணம் செய்த முதியவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.

    சேலத்தில் இருந்து சீரடிக்கு 1,207 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்ற 82 வயது சாய்பாபா பக்தர்

    • தமிழகம் முழுவதும் உள்ள தொலைதூர மாவட்டங்களுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.
    • சைக்கிள் ஓட்டுவதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியமும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கிறது.

    சேலம்:

    சேலத்தை சேர்ந்த சாய்பாபா பக்தர் கனகசபாபதி (வயது 82). இவர் மலையேறும் பயிற்சி கிளப் தலைவராகவும் உள்ளார்.

    கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இவர் தினந்தோறும் சைக்கிள் பயணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    தமிழகம் முழுவதும் உள்ள தொலைதூர மாவட்டங்களுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.

    இந்தநிலையில் அவர் சேலத்திலிருந்து சீரடிக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். அதன்படி கடந்த பிப்ரவரி 16-ந் தேதி சேலத்தில் இருந்து பயணத்தை தொடங்கிய அவர், பல்வேறு மாநிலங்களை கடந்து 22-ந் தேதி சீரடியை அடைந்தார்.

    மொத்தம் 1,207 கிலோமீட்டர் தொலைதூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

    தனது பயணத்தை நிறைவு செய்து ஊர் திரும்பிய கனகசபாபதிக்கு கிளப் நிர்வாகிகள், தொழிலதிபர்கள், உறவினர்கள் என பல்வேறு தரப்பினர் தாரை தப்பட்டை, கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டத்து டன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், சைக்கிள் ஓட்டுவதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியமும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கிறது. பல வருடங்களாக சைக்கிள் பயணம் மேற்கொள்கிறேன். இன்றைய காலகட்டத்தில் இளைஞரிடையே சைக்கிள் பயணம் குறித்து விழிப்பு ஏற்பட்டுள்ளது.

    எங்கு பார்த்தாலும் இளைய சமுதாயத்தினர் சைக்கிள் பயணம் மேற்கொள்வதை பார்க்க முடிகிறது. உற்சாகமான வாழ்விற்கு சைக்கிள் பயணம் அவசியம் என்றார்.

    Next Story
    ×