search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷீரடி"

    • கோவையிலிருந்து ஷீரடிக்கு பாரத் கவுரவ் ெரயில் சேவை வருகிற 26ந்தேதி இயக்கப்படவுள்ளதாக சேலம் ெரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
    • மறுமார்க்கத்தில் ஷீரடி- கோவை வடக்கு (06904) ெரயில் வருகிற 29-ந் தேதி மதியம் 2:10 மணிக்கு புறப்பட்டு வருகிற 30-ந் தேதி கோவை வடக்கு ரெயில் நிலையத்திற்கு 7:15மணிக்கு வந்தடையும்.

    திருப்பூர்:

    கோவையிலிருந்து ஷீரடிக்கு பாரத் கவுரவ் ெரயில் சேவை வருகிற 26ந்தேதி இயக்கப்படவுள்ளதாக சேலம் ெரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

    கோவையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பாரத் கவுரவ் ெரயில் இயக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு- சாய்நகர் ஷீரடி (06903) பாரத் கவுரவ் ெரயில் வருகிற 26-ந் தேதி கோவை வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு வரும் 28-ந் தேதி காலை 11:10 மணிக்கு ஷீரடி சென்றடையும். மறுமார்க்கத்தில் ஷீரடி- கோவை வடக்கு (06904) ெரயில் வருகிற 29-ந் தேதி மதியம் 2:10 மணிக்கு புறப்பட்டு வருகிற 30-ந் தேதி கோவை வடக்கு ரெயில் நிலையத்திற்கு 7:15மணிக்கு வந்தடையும்.

    இந்த ெரயிலானது திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், தர்மாவரம், குண்டக்கல், மந்தராலயம் சாலை, ராய்ச்சூர், வாடி, சோலாப்பூர், டான்ட் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    • சவுத் ஸ்டார் என்ற நிறுவனம் வாயிலாக இயக்கப்பட்டது.
    • அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

    திருப்பூர்:

    மத்திய அரசின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ், தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் ரெயில் இயக்க ஒப்புதல் வழங்கப்படுகிறது. கடந்த ஜூன் 13ந் தேதி நாட்டிலேயே முதன் முறையாக கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், ஆந்திரா, மந்த்ராலயம் வழியாக ஷீரடிக்கு தனியார் ெரயில் சவுத் ஸ்டார் என்ற நிறுவனம் வாயிலாக இயக்கப்பட்டது.

    பயணிகள் வரவேற்பை தொடர்ந்து மீண்டும் ஆகஸ்டு 5-ந்தேதி கோவையில் இருந்து ஷீரடிக்கு ரெயில் இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு www.southstarrail.com என்ற இணையதளத்தில் துவங்கியுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு 1800 210 2991 என்ற எண்ணில் அழைக்கலாம்.ெரயில்வே அதிகாரிகள் கூறுகையில், கோவை மட்டுமின்றி சென்னையில் இருந்து ராமேஸ்வரம், திருச்செந்தூர், சபரிமலை உட்பட பகுதிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பாரத் கவுரவ் திட்டத்தில் தனியார் ரெயில் இயக்கப்பட உள்ளது. அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றனர்.

    ×