என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்- பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்2 March 2020 8:32 AM GMT (Updated: 2 March 2020 8:32 AM GMT)
உள்துறை மந்திரி அமித் ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
டெல்லியில் நடந்த வன்முறைக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுத்தது.
இந்நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. பாராளுமன்றத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில், அமித் ஷாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். கோரிக்கை வாசகம் எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சசி தரூர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story
×