search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுனில் அரோரா
    X
    சுனில் அரோரா

    ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தலைமை தேர்தல் கமிஷனர் உறுதி

    ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு எதுவும் செய்ய முடியாது. வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பும் பேச்சுக்கே இடமில்லை என்று தலைமை தேர்தல் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. ஆனால், இந்த எந்திரங்களில் முறைகேடுகள் நிகழ்த்த வாய்ப்பு இருப்பதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. பழையபடி, ஓட்டுச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்ற குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்நிலையில், ஒரு ஆங்கில செய்தி சேனல் சார்பில் டெல்லியில் நேற்று ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கலந்து கொண்டார்.

    அங்கு அவர் பேசியதாவது:-

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களும் கார், பேனா போன்றவை மாதிரிதான். அதில் கோளாறு ஏற்படும். ஆனால், எந்த முறைகேடுகளும் நிகழ்த்த முடியாது. ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்துவதை சுப்ரீம் கோர்ட்டு உள்பட பல்வேறு கோர்ட்டுகள் வரவேற்றுள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கடந்த 20 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளன. எனவே, மீண்டும் ஓட்டுச்சீட்டு முறைக்கு திரும்பும் பேச்சுக்கே இடமில்லை.

    வாக்குப்பதிவு எந்திரம்

    இனிவரும் நாட்களில், தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் மாதிரி நடத்தை நெறிமுறை தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தும். நாளுக்குநாள் அரசியல் பேச்சுகள், மிகவும் இழிவானதாக ஆகிக் கொண்டிருக்கின்றன. இதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு சுனில் அரோரா பேசினார்.
    Next Story
    ×