search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை தேர்தல் ஆணையர்"

    • கடந்த இரு ஆண்டுகளில் நடத்திய 11 மாநில சட்டசபை தேர்தல்களில் 3,400 கோடி ரூபாய் பறிமுதல் செய்தோம்.
    • போலியான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், கர்நாடகம், சத்தீஸ்கர், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, இமாசல பிரதேசம், குஜராத் மற்றும் திரிபுரா ஆகிய 11 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களை நடத்தி உள்ளோம்.

    கடந்த இரு ஆண்டுகளில் 11 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்தியுள்ளோம். அப்போது நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 3,400 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளோம்.

    சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யலாம். போலி செய்தி பரப்பக் கூடாது. போலியான தகவல்கள் செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலில் வெறுப்பு பிரசாரம் இருக்கக் கூடாது. தனி நபர் வாழ்க்கை குறித்து எந்த விமர்சனமும் இருக்கக் கூடாது என தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
    • முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும். முதல் கட்டமாக தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும்.

    மேலும் 4 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி, சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல்களை ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா இங்கே. 2024 மக்களவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலுக்கு முழுமையாக தயாராகி உள்ளோம். நல்லாட்சி மற்றும் துறைகள் முழுவதும் சேவை வழங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் மக்களிடம் செல்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    • ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் மே 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும்.
    • வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலுடன் 4 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி, சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல்களை ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.

    ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் மே 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த தயாராக உள்ளோம்.
    • தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பின்பற்றுவோம் என்றார்.

    புவனேஸ்வர்:

    அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை அளிக்கும் திட்டத்தை, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அனைத்து விவகாரங்களிலும் தேர்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

    தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பின்பற்றுவோம். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் தேர்தல் நடத்துவது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின்படி செயல்படுவோம்.

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த முழுமையாக தயாராக உள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன என தெரிவித்துள்ளார்.

    • டெல்லியில் இன்றும், நாளையும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
    • ஒவ்வொரு மாநில தேர்தல் அதிகாரியிடமும் வாக்காளர் பட்டியல் ஏற்பாடு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவிக் காலம் வருகிற மே மாதம் நிறைவு பெற உள்ளது.

    இதையடுத்து புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்த வேண்டியது உள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இதற்கான தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக் கான அட்டவணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) இறுதியில் வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதற்கு முன்னதாக நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

    இதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு மாநிலத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்கான பூர்வாங்கப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலம் வாரியாக தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன் ஏற்பாடுகள், சட்டம்-ஒழுங்கு நிலவரம் ஆகியன குறித்து அந்தந்த மாநிலத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    மக்களவைத் தேர்தலுக்கான முன் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையக் குழுவினர் தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட காரணங்களால், தேர்தல் ஆணையக் குழுவினரின் வருகை தள்ளிப்போயுள்ளது.

    இதனிடையே, அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. டெல்லியில் இன்றும், நாளையும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த விவரங்களை அந்தந்த மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகள் விளக்க உள்ளனர். குறிப்பாக பாதுகாப்பு, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, சட்டம்-ஒழுங்கு நிலவரம் ஆகியவை முழுமையாக ஆய்வு செய்யப்படும்.

    மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏதேனும் முக்கிய பண்டிகைகள் வருகிறதா என்பது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாநில சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் தேதி அட்டவணை தயாரிக்க இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    மேலும் ஒவ்வொரு மாநில தேர்தல் அதிகாரியிடமும் வாக்காளர் பட்டியல் ஏற்பாடு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இந்தக்கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு டெல்லி சென்றுள்ளார்.

    • வாக்காளர்களுக்கு பணம், மது, இலவசங்கள் தருவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை.
    • நேர்மையான முறையில் தேர்தலை நடத்த விரும்புவதாக தேர்தல் ஆணையம் தகவல்.

    குஜராத் மாநிலத்தில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும் நிலையில், 788 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர்.

    இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இதுவரை ரூ.750 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் மற்றும் போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: 


    பணம் கடத்தப்படுவதாக பல இடங்களில் இருந்து புகார்கள் வந்துள்ளன.  தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது மோசமான நடைமுறையாகும், நாங்கள் அதை முற்றிலும் தடுக்கும் முயற்சியை செய்கிறோம். குஜராத்தின் அண்டை மாநில எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வருவாய் புலனாய்வு இயக்குநரகம், வருமானவரித்துறை, தீவிரவாத தடுப்புப்படை மற்றும் மாநில காவல்துறை இணைந்து இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டன.

    குஜராத்தில் கடந்த 2017 தேர்தலின் போது ரூ.27 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் இந்த தேர்தலில் இதுவரை 750 கோடி ரூபாய் அளவிற்கு ரொக்க பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குஜராத்தில் மதுவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 15 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 60 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளது. 


    தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடவடிக்கையால் இந்த முறை கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு அதிகரித்துள்ளது. வதோதராவில் பெரிய அளவில் ஜப்தி நடக்கிறது. ரூ.450 கோடி வரை பறிமுதல் செய்யப்படும். 171 கோடி மதிப்பில் இலவசங்கள் இருந்தன. பணம், மது, போதைப்பொருள் மற்றும் இலவச பொருட்களை வாக்காளர்களுக்கு, வேட்பாளர்கள் வழங்க கூடாது என்று நாங்கள் அதிகாரிகளுக்கு தெளிவாக அறிவுறுத்தி உள்ளோம். நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதையே நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பனிப்பொழிவு தொடங்குவதற்கு முன் இமாச்சல பிரதேச தேர்தலை நடத்த முடிவு.
    • இரு மாநில தேர்தல் தேதி அறிவிப்பு விவகாரத்தில் விதிகள் மீறப்படவில்லை.

    பாஜக ஆட்சி நடைபெற்று வரும் குஜராத் மாநிலத்தில் சட்டசபை பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. இதேபோல் இமாச்சல பிரதேச மாநில சட்டசபை பதவிக் காலம் வரும் ஜனவரி மாதம் நிறைவடைகிறது. இதையடுத்து இன்று இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு மட்டும் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நவம்பர் 12-ந் தேதி ஒரே கட்டமாக அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், பனிப்பொழிவு தொடங்குவதற்கு முன் இமாச்சல பிரதேச தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறினார்.

    இமாச்சல பிரதேசத்தில் 57 நாட்கள் மட்டுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்றார். தேர்தல் விதிகளின்படி, ஒரு மாநில தேர்தலின் முடிவு மற்றொன்றை பாதிக்காத வகையில், இரண்டிற்கும் குறைந்தபட்சம் 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இரு மாநிலங்களுக்கு தேர்தல் தேதி  அறிவிக்கப்படும் விவகாரத்தில் விதிகள் மீறப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    குஜராத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறுமா என்ற செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த அவர், நாங்கள் குஜராத்துக்கு தேர்தல் நடத்தும் அறிவிப்பை வெளியிடும் போது அதை உங்களுக்குச் சொல்வோம் என்று கூறினார்.

    இந்நிலையில் குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளி வைக்கப்படுவது, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக, பாஜக மேலும் நலத் திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. பிரதமருக்கு அதிக அவகாசம் அளிக்கும் வகையில் இது செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் ஆச்சரியப்படுவதற்து ஒன்றுமில்லை என்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

    திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தலை ஒத்திவைக்க காரணம், பிறரின் அழுத்தங்கள் அல்ல என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் திட்டவட்டமாக கூறினார். #OPRawat #ElectionCommissionofIndia
    புதுடெல்லி :

    திருப்பரங்குன்றம் தொகுதியின் எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ், கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி திடீர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதே போன்று திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் இவ்விரு தொகுதிகளும் காலியாக உள்ளன.

    மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களுடன், இந்த 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இந்த தொகுதிகளில் இடைத்தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தமிழகத்தில் மழைக்காலம் தொடங்குவதால் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டாம் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக்கொண்டதே இதற்கு காரணம் என தகவல்கள் வெளியாகின. ஆனால், தேர்தல் கமிஷனுக்கு வந்த அழுத்தங்களே இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு காரணம் என தமிழக அரசியல் கட்சிகள் கருத்து வெளியிட்டன.

    இந்நிலையில் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு காரணங்கள் குறித்து அவர் கூறியதாவது :-

    யாருடைய அழுத்தத்துக்கும் அடிபணிந்து தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்கவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏற்கனவே நடந்த இடைத்தேர்தல் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

    திருவாரூரைப் பொறுத்தமட்டில், தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை தமிழக அரசு தலைமைச் செயலாளர் சுட்டிக்காட்டி இருந்தார். அதனால்தான் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில் வருகிற 23-ந் தேதி முடிவு ஏற்பட்டால், அதில் இருந்து 6 மாத காலத்துக்குள் 2 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #OPRawat #ElectionCommissionofIndia
    ×