search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜீவ்குமார்"

    • வாக்காளர்களுக்கு பணம், மது, இலவசங்கள் தருவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை.
    • நேர்மையான முறையில் தேர்தலை நடத்த விரும்புவதாக தேர்தல் ஆணையம் தகவல்.

    குஜராத் மாநிலத்தில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும் நிலையில், 788 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர்.

    இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இதுவரை ரூ.750 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் மற்றும் போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: 


    பணம் கடத்தப்படுவதாக பல இடங்களில் இருந்து புகார்கள் வந்துள்ளன.  தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது மோசமான நடைமுறையாகும், நாங்கள் அதை முற்றிலும் தடுக்கும் முயற்சியை செய்கிறோம். குஜராத்தின் அண்டை மாநில எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வருவாய் புலனாய்வு இயக்குநரகம், வருமானவரித்துறை, தீவிரவாத தடுப்புப்படை மற்றும் மாநில காவல்துறை இணைந்து இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டன.

    குஜராத்தில் கடந்த 2017 தேர்தலின் போது ரூ.27 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் இந்த தேர்தலில் இதுவரை 750 கோடி ரூபாய் அளவிற்கு ரொக்க பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குஜராத்தில் மதுவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 15 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 60 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளது. 


    தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடவடிக்கையால் இந்த முறை கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு அதிகரித்துள்ளது. வதோதராவில் பெரிய அளவில் ஜப்தி நடக்கிறது. ரூ.450 கோடி வரை பறிமுதல் செய்யப்படும். 171 கோடி மதிப்பில் இலவசங்கள் இருந்தன. பணம், மது, போதைப்பொருள் மற்றும் இலவச பொருட்களை வாக்காளர்களுக்கு, வேட்பாளர்கள் வழங்க கூடாது என்று நாங்கள் அதிகாரிகளுக்கு தெளிவாக அறிவுறுத்தி உள்ளோம். நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதையே நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அரியானாவில் இருந்து யமுனை ஆற்றுக்கு வரும் நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளது என்றார் கெஜ்ரிவால்.
    • இது குறித்து உரிய பதிலளிக்கும்படி கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    புதுடெல்லி:

    அரியானாவில் இருந்து யமுனை ஆற்றுக்கு வரும் நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளது என ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். டெல்லி சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில் அவரது குற்றச்சாட்டு டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து, டெல்லியில் யமுனை ஆற்றில் விஷம் கலப்பு பற்றி பேசியதற்கு உரிய பதிலளிக்கும்படி கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தேர்தல் ஆணையம் அரசியல் செய்துவருகிறது. ஓய்வுக்கு பின் தேர்தல் ஆணைய தலைவர் ராஜிவ்குமாருக்கு ஒரு வேலை வேண்டும் என விரும்புகிறார். ராஜிவ்குமாரிடம் நான் கூற விரும்புவது என்னவென்றால், வரலாறு உங்களை மன்னிக்காது. தேர்தல் ஆணையத்தில் அவர் குழப்பம் ஏற்படுத்தி விட்டார். ராஜிவ் குமார் அரசியல் செய்ய விரும்பினால் டெல்லியில் ஒரு தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    ×