search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யமுனை நதி"

    • டெல்லி நகருக்கு ஒரு நாளைக்கு 125 கோடி கேலன் தண்ணீர் தேவைப்படுகிறது.
    • மழை குறைந்ததால் யமுனையில் தண்ணீர் அளவு குறைந்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி நகரின் தண்ணீர் தேவையை யமுனை நதி 40 சதவீதம் தீர்த்து வைக்கிறது. டெல்லிக்கு அருகே உள்ள அரியானா மாநிலத்தில் இருந்து யமுனை நதி தண்ணீரை சுத்திகரித்து டெல்லிக்கு கொண்டு வருகிறார்கள். மீதமுள்ள தண்ணீரை கங்கையில் இருந்து எடுக்கிறார்கள்.

    டெல்லி நகருக்கு ஒரு நாளைக்கு 125 கோடி கேலன் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 95 கோடி கேலன் தண்ணீரை டெல்லி குடிநீர்வாரியம் ஏற்பாடு செய்து கொடுக்கிறது. வழக்கமாக கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது இயல்பு. ஆனால் இந்த ஆண்டு டெல்லியில் அது அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மழை குறைந்ததால் யமுனையில் தண்ணீர் அளவு குறைந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

    அதே நேரத்தில் அரியானா மாநிலத்தில் யமுனையில் அதிகப்படியான மணலை அள்ளியதால்தான் தண்ணீர் வற்றிப்போனதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இருக்கிற தண்ணீரும் ரசாயனம் கலந்திருப்பதால் அதை சுத்திகரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவருவது கடினமான காரியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • யமுனை நதியில் அரிதாக டால்பின் மீன் வலையில் பிடிப்பட்டது
    • வனவிலங்கு அதிகாரிகள் வீடியோவை பார்த்து கைது நடவடிக்கை

    தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் குறிப்பாக உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக யமுனை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதற்கிடையே நான்கு மீனவர்கள் வலைவீசி யமுனையில் மீன்பிடித்துள்ளனர். கடந்த 22-ந்தேதி அவர்கள் வீசிய வலையில் தற்செயலாக டால்பின் மீன் சிக்கியுள்ளது. பொதுவாக யமுனை நதியில் டால்பின் மீன்கள் இருப்பதில்லை. அரிதாக இவர்கள் வலையில் சிக்கியுள்ளது.

    டால்பின் மீனை கெத்தாக தனது தோளில் சுமந்து சென்றுள்ளார் அதில் ஒரு மீனவர். அதோடு வீட்டிற்கு கொண்டு சென்று டால்பின் மீனை சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

    இதை சாலையில் சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் வனத்துறையினருக்கு புகார் வர, வீடியோவை ஆதாரமாக கொண்டு டால்பின் மீனை பிடித்த மீனவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

    வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    • யமுனை நீரில் விஷம் கலந்ததாக அரியானா அரசுமீது கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
    • இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி தேர்தல் ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியது.

    சண்டிகர்:

    டெல்லி மக்களின் குடிநீ்ர் ஆதாரமாக விளங்கும் யமுனை நதி நீரில் விஷம் கலந்ததாக அரியானா அரசு மீது கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி தேர்தல் ஆணையம் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது.

    இந்நிலையில், யமுனை நதியில் விஷம் கலக்க முயற்சி எனக்கூறிய கருத்து தொடர்பாக, அரியானா அரசு கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர்ந்தது.

    இந்நிலையில், பிப்ரவரி 17-ம் தேதி சோனிபேட் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

    அவ்வாறு செய்யத் தவறினால் சட்ட விதிகளின்படி அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரியானாவில் இருந்து யமுனை ஆற்றுக்கு வரும் நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளது என்றார் கெஜ்ரிவால்.
    • இது குறித்து உரிய பதிலளிக்கும்படி கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    புதுடெல்லி:

    அரியானாவில் இருந்து யமுனை ஆற்றுக்கு வரும் நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளது என ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். டெல்லி சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில் அவரது குற்றச்சாட்டு டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து, டெல்லியில் யமுனை ஆற்றில் விஷம் கலப்பு பற்றி பேசியதற்கு உரிய பதிலளிக்கும்படி கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தேர்தல் ஆணையம் அரசியல் செய்துவருகிறது. ஓய்வுக்கு பின் தேர்தல் ஆணைய தலைவர் ராஜிவ்குமாருக்கு ஒரு வேலை வேண்டும் என விரும்புகிறார். ராஜிவ்குமாரிடம் நான் கூற விரும்புவது என்னவென்றால், வரலாறு உங்களை மன்னிக்காது. தேர்தல் ஆணையத்தில் அவர் குழப்பம் ஏற்படுத்தி விட்டார். ராஜிவ் குமார் அரசியல் செய்ய விரும்பினால் டெல்லியில் ஒரு தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 27 ஆண்டுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியது.
    • யமுனை நதியை சுத்தம் செய்வோம் என பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது.

    புதுடெல்லி:

    சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் 27 ஆண்டுக்குப் பிறகு வெற்றிபெற்று பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. கடந்த தேர்தலில் யமுனை நதியை சுத்தம் செய்வோம் என வாக்குறுதி அளித்த பா.ஜ.க. டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.

    இந்நிலையில், யமுனை நதியை சுத்தம் செய்யும் பணியை டெல்லி பா.ஜ.க. அரசு தொடங்கியுள்ளது.

    இதுதொடர்பாக டெல்லி கவர்னர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    யமுனை நதியை தூய்மை செய்யும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. நீரில் மிதக்கும் குப்பைகள், ஆக்கிரமிப்பு செடிகளை அகற்றவும், நீர்நிலைகளின் அடிப்பகுதி மண்ணை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

    டெல்லி தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்த துணைநிலை கவர்னர் சக்சேனா உடனே யமுனை நதியை தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்க உத்தரவிட்டிருந்தார் என தெரிவித்துள்ளது.

    ×