search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக
    X
    திமுக

    உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. புதிய வழக்கு

    உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்புமனு டிசம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    உச்ச நீதிமன்றம்

    அதில், வார்டு மறுவரையறை முழுமையாக நிறைவடையும் வரை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என திமுக  தனது மனுவில் கூறியுள்ளது. வார்டு மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த புதிய மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது.

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் ஏற்கனவே தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக நாளை விசாரிக்க உள்ளது. அத்துடன் 5 புதிய மாவட்டங்களின் வாக்காளர்கள் தொடர்ந்த மனுவையும் உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×