search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா - சிவசேனா
    X
    பா.ஜனதா - சிவசேனா

    முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு எதிரொலி - பா.ஜனதா- சிவசேனா பேச்சுவார்த்தை ரத்து

    சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடையாது என தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்ததை அடுத்து, பா.ஜனதா- சிவசேனா பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    மும்பை:

    மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜனதா, சிவசேனா கட்சி இடையே கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தநிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சிவசேனாவுக்கு 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி தருவதாக எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து நேற்று மாலை 4 மணிக்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக நடைபெற இருந்த பா.ஜனதா- சிவசேனா பேச்சுவார்த்தையை சிவசேனா திடீரென ரத்து செய்து உள்ளது.

    இது குறித்து சிவசேனா மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

    நேற்று நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தையில், பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், புபேந்திரயாதவ் மற்றும் சிவசேனா சார்பில் சுபாஷ் தேசாய், சஞ்சய் ராவத் ஆகி யோர் கலந்துகொள்ள இருந்தனர்.

    இந்தநிலையில் உத்தவ் தாக்கரே அந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்து உள்ளார். முதல்-மந்திரி தான் கூறிய வாக்குறுதிகளை நினைத்து பார்க்காமல் சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி தரமுடியாது என கூறியிருக்க கூடாது. மேலும் ஆட்சி அதிகாரத்தில் சிவசேனாவுக்கு சரிபாதி பங்கு வழங்குவது குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசிய வீடியோவையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×