search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமருடன் சத்யபால் மாலிக் சந்திப்பு
    X
    பிரதமருடன் சத்யபால் மாலிக் சந்திப்பு

    பிரதமர் மோடியுடன் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் திடீர் சந்திப்பு

    ஜம்மு காஷ்மீர் ஆளுநராக உள்ள சத்யபால் மாலிக் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று திடீரென சந்தித்தார்.
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேச அந்தஸ்து வரும் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.  

    இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு கிரிஷ் சந்திரா முர்மு, லடாக் யூனியன் பிரதேசத்துக்கு ஆர்.கே.மாத்தூர் ஆகியோரை புதிய ஆளுநர்களாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்து உத்தரவிட்டார்.

    தற்போது ஜம்மு காஷ்மீர் ஆளுநராக செயல்பட்டு வந்த சத்யபால் மாலிக்கை கோவா ஆளுநராக மாற்றப்பட்டார்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் ஆளுநராக உள்ள சத்யபால் மாலிக் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று திடீரென சந்தித்தார். அவர் ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து விவாதித்தார். 
    Next Story
    ×