search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்"

    • 1987 முதல் 1992 வரை ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் 45 கருணை மனுக்களை நிராகரித்தார்.
    • அவருக்கு அடுத்தபடியாக பிரணாப் முகர்ஜி தான் அதிக மனுக்களை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து வருகிற 18-ந்தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில் தனது பதவி காலத்தில் ராம்நாத் கோவிந்த் 6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்து உள்ளார்.

    பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜகத்ராய். இவர் ராம்பூர் ஷியாம் சந்திரா கிராமத்தை சேர்ந்த விஜயேந்திர மகோத்தா மனைவி மற்றும் 5 குழந்தைகள் வீட்டுக்கு தீ வைத்து உயிரோடு எரித்துக்கொன்றார்.

    கடந்த 2006-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக ஜகத் ராய் கைது செய்யப்பட்டார். அவருக்கு 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதையடுத்து அவர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். இந்த கருணை மனுவை தான் முதன் முதலாக ராம்நாத் கோவிந்த் பதவிக்கு வந்ததும் நிராகரித்தார்

    இதன் தொடர்ச்சியாக நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் கருணை மனுக்களை கடந்த 2020-ம் ஆண்டு நிராகரித்தார்.

    2012-ம் ஆண்டு டெல்லியில் நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஓடும் பஸ்சில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக முகேஷ்சிங், வினய் சர்மா, அக்‌ஷய்குமார் சிங், பவன்குப்தா உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதில் முக்கிய குற்றவாளியாக இருந்த ராம்சிங் விரைவு கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது திகார் ஜெயிலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் ஒருவர் சிறார் என்பதால் சிறார் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

    மற்ற 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் 4 பேரும் தனித்தனியாக ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பினர். இந்த மனுக்களையும் 2020-ம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

    இதேபோல கடைசியாக 2006-ம் ஆண்டு தூக்கு தண்டணை பெற்ற சஞ்சய் என்பவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டது.

    கடந்த 2012 முதல் 2017 வரை ஜனாதிபதியாக பதவி வகித்த பிரணாப் முகர்ஜி மொத்தம் 30 கருணை மனுக்களை நிராகரித்தார்.

    1987 முதல் 1992 வரை ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் 45 கருணை மனுக்களை நிராகரித்தார். அவருக்கு அடுத்தபடியாக பிரணாப் முகர்ஜி தான் அதிக மனுக்களை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் 2 மனுக்களையும், இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் 5 கருணை மனுக்களையும் நிராகரித்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடலூர் அருகே ஆற்றில் உள்ள தடுப்பணையில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கும் சோகமாகும்.
    • துயர் மிகுந்த வேளையில், அவர்களின் குடும்பங்கள் மன சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    புதுடெல்லி:

    கடலூர் அருகே ஏ.குச்சி பாளையத்தில் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் நீரில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்தனர்.

    இந்த துயர சம்பவத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில், 'தமிழகத்தில் கடலூர் அருகே ஆற்றில் உள்ள தடுப்பணையில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கும் சோகமாகும். இந்த சம்பவம் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. பலியானவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

    மோடி டுவிட்டரில் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில், ஏழு சிறுமியர் ஆற்றில் மூழ்கி உயிரிழத்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். இந்த துயர் மிகுந்த வேளையில், அவர்களின் குடும்பங்கள் மன சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    தசரா விழாவின்போது ராவணன் கொடும்பாவிகளை எரிக்கும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு பூரி சங்கராச்சாரியார் அதோக்‌ஷஜானந்த் தேவ் திர்த்த் மஹராஜ் வேண்டுகோள் வைத்துள்ளார். #Abolishpractice #Ravanaeffigy #PuriShankaracharya
    லக்னோ:

    பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜோடா பதக் பகுதியருகே ராவணன் கொடும்பாவி எரிக்கப்படுவதை நின்று வேடிக்கை பார்த்த மக்கள் மீது சமீபத்தில் ரெயில் மோதிய விபத்தில் சுமார் 60 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், இந்த கோர விபத்து தொடர்பாக மதுரா நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பூரி சங்கராச்சாரியார் அதோக்‌ஷஜானந்த் தேவ் திர்த்த் மஹராஜ், 'தசரா விழாவின்போது ராவணன் கொடும்பாவிகளை எரிக்கும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும்’ என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

    இதுபோன்ற கொடும்பாவி எரிக்கும் பழக்கத்தை பழமைவாதம் என்று குறிப்பிட்ட அவர், அடிப்படையான இந்து கலாச்சாரத்துக்கு எதிரான இந்த பழக்கம் பஞ்சாப்பில் நிகழ்ந்தது போன்ற சோகத்துக்கும் வழி வகுத்து விடுகிறது என்று தெரிவித்தார். 

    இந்து புராணத்தின்படி, இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் ஒரே ஒருமுறை மட்டுமே செய்யப்பட வேண்டும். அவ்வகையில், ராவணனின் இறுதிச் சடங்குகளை ராமபிரான் முன்னிலையில் விபீஷணன் செய்து முடித்து விட்டார். 

    எனவே, தசரா விழாக்களின்போது இதுபோல் கொடும்பாவிகளை கொளுத்துவதால் பெரிய அளவில் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுகிறது. எனவே, இந்த பழக்கம் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். #Abolishpractice  #Ravanaeffigy #PuriShankaracharya  
    காவேரி மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். #KarunanidhiHealth #Karunanidhi #DMK #PresidentKovind
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் சுரேஷ் பிரபு, நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள, ஆந்திர முதல்வர்கள், முன்னாள் பிரதமர் தேவே கவுடா உள்ளிட்ட தலைவர்கள், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நடிகர்கள் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு வருகை தந்து விசாரித்தனர்.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் ராகுல் காந்தி காந்தி ஆகியோர் மட்டும் கருணாநிதியை நேரில் பார்த்தனர். மற்ற தலைவர்கள் ஸ்டாலின் மற்றும் கனிமொழியை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளனர்.

    இந்நிலையில், ஆந்திராவில் நேற்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கேரளாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க சென்னை வருகை தந்தார். விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்கள் வரவேற்றனர்.

    அங்கிருந்து, கார் மூலம் காவேரி மருத்துவமனைக்கு வந்தடைந்த அவரை ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் வரவேற்றனர். அங்கு, கருணாநிதியை சந்தித்த அவர், கருணாநிதிக்கு அளித்து வரும் சிகிச்சைகள் பற்றி ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். 

    பின்னர், மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட அவர் காரிலிருந்து இறங்கி மக்களை நோக்கி கைகளை காட்டினார். பின்னர் காரில் விமான நிலையம் சென்ற அவர், அங்கிருந்து கேரளாவுக்கு விமானம் மூலம் புறப்பட்டார்.

    இது தொடர்பாக ட்விட்டர் கணக்கில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளதாவது:-


    மத்திய அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று கியூபா சென்றடைந்தார். அங்கு பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார். #PresidentKovind
    ஹவானா:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கிரீஸ், சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று கியூபா சென்றடைந்தார். ஹவானா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை அந்நாட்டு மந்திரி மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர்.

    இதனை அடுத்து, முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்துக்கு சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அங்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார். அந்நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கும் அவர், அதிபரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் கோவிலுக்கு வந்தபோது, கோவிலுக்குள் அவரை அனுமதிக்கவில்லை என வாட்ஸ்அப்பில் பரவிய புரளியால் அந்த கோவிலின் பூசாரி தாக்கப்பட்டுள்ளார்.
    ஜெய்ப்பூர்:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தார். புஷ்கர் என்ற பகுதியில் உள்ள கோவிலுக்கு அவர் தரிசனம் செய்ய வந்தார். ஆனால், அவரது மனைவிக்கு மூட்டுவலி காரணமாக படியேறி செல்வது கடினம் என்பதால், வாசலில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பிவிட்டார்.

    ஆனால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கோவில் பூசாரி உள்ளே அனுமதிக்கவில்லை என அங்குள்ளவர்களுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் பரவியது. இதனை அடுத்து, இந்த வதந்தி காரணமாக அசோக் மேஹ்வால் என்பவர் அந்த கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவது போல வரிசையில் நின்று, பின்னர் பூசாரி அருகில் வந்த போது அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

    இதில், பூசாரிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து, தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்க வாய்ப்பு உள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×