search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீதரன் பிள்ளை
    X
    ஸ்ரீதரன் பிள்ளை

    ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் நியமனம்

    ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேச அந்தஸ்து வரும் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.  

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு புதிய கவர்னர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    நியமித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு கிரிஷ் சந்திரா முர்மு, லடாக் யூனியன் பிரதேசத்துக்கு ஆர்.கே.மாத்தூர் ஆகியோர் புதிய ஆளுநர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதேபோல், மிசோராம் மாநிலத்துக்கு பி எஸ் ஸ்ரீதரன் பிள்ளை ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் ஆளுநராக செயல்பட்டு வந்த சத்யபால் மாலிக், கோவா ஆளுநராக மாற்றப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×