search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொச்சி விமான நிலையம்
    X
    கொச்சி விமான நிலையம்

    கொச்சி விமான நிலையத்தில் நாளை முதல் விமான சேவை

    கேரளாவில் கனமழை காரணமாக ரன்வேயில் தண்ணீர் சூழ்ந்ததால் மூடப்பட்ட கொச்சி விமான நிலையம் நாளை முதல் செயல்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருவனந்தபுரம்:

    தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. 

    கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுது. திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டது.

    இதற்கிடையே, கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ரன்வேயில் தண்ணீர் சூழ்ந்ததை தொடர்ந்து கொச்சி விமான நிலையம் மூடப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், கனமழையால் மூடப்பட்ட கொச்சி விமான நிலையம் நாளை முதல் செயல்படும். விமான சேவைகள் நாளை முதல் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×