என் மலர்
நீங்கள் தேடியது "தென்மேற்கு பருவமழை"
- தமிழகத்தின் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கி கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.
- சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் இயல்பான அளவு 406.4 மி.மீ. ஆகும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளதால் 70 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இங்கு மேட்டூர் அணை இருந்தாலும் நேரடி பாசனம் குறைந்த அளவிலேயே உள்ளது. தற்போது சரபங்கா நீரேற்று திட்டம் மூலம் சேலம் மேற்கு மாவட்ட பகுதிகளில் ஒரு பகுதி பாசன வசதி பெற்றுள்ளது. ஆனாலும் ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளுக்கு மேட்டூர் அணை தண்ணீர் செல்லாததால் இந்த பகுதிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தின் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கி கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அதனை எதிர்பார்த்து விவசாயிகள் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் இயல்பான அளவு 406.4 மி.மீ. ஆகும். ஆனால் நடப்பாண்டில் 339.2 மி.மீ. மழையே பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 67.2 மி.மீ. குறைவாகும். இதனால் நடப்பாண்டில் வழக்கத்தை விட 17 சதவீதம் தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் நீர் நிலைகளில் வழக்கத்தை விட குறைந்த அளவே தண்ணீர் இருப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஆனாலும் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால் அந்த மழை கூடுதலாக பெய்து தங்களுக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.
- தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து இயல்பை விட அதிகமாக பதிவாகி உள்ளது.
- வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாக பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு பருவமழை வடமாநிலங்களில் படிப்படியாக விலகி வருகிறது. தமிழகத்தில் அக்டோபர் மாதம் 2-வது வாரம் வாக்கில் விலகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து இயல்பை விட அதிகமாக பதிவாகி உள்ளது. அக்டோபர் 12-ந் தேதி முதல் 14-ந்தேதி இடையே விலகுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் 20-ந்தேதிக்குள் முழுமையாக விலகி விடும் என்றும் அதனை தொடர்ந்து வட கிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாக பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகியவுடன் அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பருவமழை தொடங்க இருப்பதால் சென்னையில் சாலைகள், மழைநீர் கால்வாய் பணிகள், கால்வாய் தூர்வாருதல், நீர்நிலைகளில் தேங்கியுள்ள கழிவுகள் அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
- செப்டம்பர் வரையில் பெய்யக்கூடிய மழை அளவைத்தான் தென்மேற்கு பருவமழை காலத்தில் பதிவு செய்யப்படுகிறது.
- கடந்த ஆண்டும் நெல்லையில் 249 சதவீதம் இயல்பைவிட அதிக மழை பதிவாகியிருந்தது.
சென்னை:
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை கணக்கில் கொள்ளப்படுகிறது. இந்த பருவமழை முற்றிலும் நீங்க, அக்டோபர் மாதம் 2-வது வாரம் வரை காலம் எடுத்துக் கொண்டாலும், செப்டம்பர் வரையில் பெய்யக்கூடிய மழை அளவைத்தான் தென்மேற்கு பருவமழை காலத்தில் பதிவு செய்யப்படுகிறது.
அந்த வகையில் தென்மேற்கு பருவமழை காலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி பெறக்கூடிய மொத்த மழை என்பது 32.8 செ.மீ. ஆகும். இது இயல்பான மழை அளவு. அதன்படி, கடந்த ஜூன் 1-ந்தேதியில் இருந்து நேற்று வரையிலான (செப்டம்பர் 29-ந்தேதி) நிலவரப்படி, 32.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதாவது இயல்பைவிட ஒரு சதவீதம் அதிகமாக மழை கிடைத்திருக்கிறது.
இதில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட 250 சதவீதம் அதிகம் மழை பெய்திருந்தது. இந்த காலக்கட்டத்தில் அங்கு 8.9 செ.மீ. மழை பதிவாகும். ஆனால் 31.3 செ.மீ. மழை பெய்திருந்தது. கடந்த ஆண்டும் நெல்லையில் 249 சதவீதம் இயல்பைவிட அதிக மழை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதற்கடுத்தபடியாக, தென்காசி மாவட்டத்தில் 55 சதவீதமும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 79 சதவீதமும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 46 சதவீதமும், கோவை மாவட்டத்தில் 39 சதவீதமும் மழை பதிவாகி உள்ளது. இதுதவிர, அரியலூர் (+6 சதவீதம்), சென்னை (+30 சதவீதம்), கடலூர் (+14 சதவீதம்), நீலகிரி (+13 சதவீதம்), சிவகங்கை (+4 சதவீதம்), தஞ்சாவூர் (+7 சதவீதம்), தேனி (+10 சதவீதம்),
திருப்பத்தூர் (+21 சதவீதம்), திருவள்ளூர் (+33 சதவீதம்), திருவண்ணாமலை (+9 சதவீதம்), திருவாரூர் (+9 சதவீதம்), வேலூர் (+36 சதவீதம்), விழுப்புரம் (+18 சதவீதம்) மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும் மழை பெய்துள்ளது.
மேலும், செங்கல்பட்டு (-7 சதவீதம்), தர்மபுரி (-21 சதவீதம்), திண்டுக்கல் (-41 சதவீதம்), ஈரோடு (-26 சதவீதம்), கள்ளக்குறிச்சி (-31 சதவீதம்), காஞ்சீபுரம் (-3 சதவீதம்), கன்னியாகுமரி (-1 சதவீதம்), கரூர் (-35 சதவீதம்), கிருஷ்ணகிரி (-17 சதவீதம்), மதுரை (-24 சதவீதம்), நாகப்பட்டினம் (-22 சதவீதம்), நாமக்கல் (-31 சதவீதம்), பெரம்பலூர் (-2 சதவீதம்), புதுக்கோட்டை (-6 சதவீதம்), ராமநாதபுரம் (-48 சதவீதம்), சேலம் (-15 சதவீதம்),
திருப்பூர் (-59 சதவீதம்), தூத்துக்குடி (-62 சதவீதம்), திருச்சி (-26 சதவீதம்), விருதுநகர் (-46 சதவீதம்) ஆகிய 20 மாவட்டங்களில் குறைவான மழை பதிவாகியிருக்கிறது. தமிழ்நாட்டைத் தவிர, புதுச்சேரியில் 51 சதவீதமும், காரைக்காலில் 32 சதவீதமும் அதிகமாக இந்த பருவமழையில் மழை பெய்துள்ளது.
பொதுவாக தென்மேற்கு பருவமழையை காட்டிலும், வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழகம் அதிக மழையை பெறும். அடுத்த மாதம் (அக்டோபர்) 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.
- அதிகபட்சமாக நெல்லையில் 333 மி.மீ. மழை கூடுதலாக பெய்துள்ளது.
- தென்மேற்கு பருவமழை காலம் செப்டம்பர் மாதம் வரை உள்ளது.
சென்னை:
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக வெள்ளம் நிலச்சரிவு ஏற்பட்டன. இதனால் கடுமையான உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வடமாநிலங்களில் செப்டம்பர் மாதம் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது.
வடகிழக்கு, கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள், கடைக்கோடி தென்தீபக்கற்ப பகுதிகளை தவிர்த்து நாடு முழுவதும் பரலாக அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 209.7 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும். ஆனால் 214 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 6 மில்லி மீட்டர் அதிகமாகும். மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 19 மாவட்டங்களில் சராசரி மழை அளவை விட கூடுதலாக பெய்துள்ளது.
அதிகபட்சமாக நெல்லையில் 333 மி.மீ. மழை கூடுதலாக பெய்துள்ளது. தென்காசியில் 88 மி.மீ., கோவை 52 மி.மீ. மயிலாடுதுறை 49 மி.மீ. திருவள்ளூர் 44 மி.மீ., தேனி 41 மி.மீ., ராணிப்பேட்டை 40 மி.மீ., சென்னையில் 23 மி.மீ. கூடுதலாக மழை பெய்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காலம் செப்டம்பர் மாதம் வரை உள்ளது. ஆனால் கடந்த 3 மாதங்களில் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 19 மாவட்டங்களில் இயல்பைவிட மழை குறைவாக பெய்துள்ளது. இந்த மாதம் பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
- தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை, வெப்பசலன மழை கடந்த சில மாதங்களாக கைக்கொடுத்து வருகிறது. இடையில் பல நாட்கள் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இந்த மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குமரி கடலை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக டெல்டா, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை தீவிரமாக இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இன்று, நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுதினம் (புதன்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதேபோல், இன்று (திங்கட்கிழமை) கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை (செவ்வாய்க்கிழமை) நீலகிரி மாவட்டம், கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை வரையிலும் பெய்யக்கூடும். கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் எதிர்பார்க்க்படுகிறது.
நாளை மறுதினம் (புதன்கிழமை) கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதில் அதிகனமழை வரை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மிககனமழை வரை பெய்யும் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கனமழை வரை பெய்யும் இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
- இயல்பான அளவான 418.9 மி.மீ.யை விட அதிகமாக 447.8 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
- அருணாசல பிரதேசம், அசாம், பீகார், டெல்லி, மகாராஷ்டிரா, லட்சத்தீவுகள் போன்றவை 20 முதல் 59 சதவீதம் வரை குறைவான மழைப்பொழிவை பெற்று இருக்கின்றன.
புதுடெல்லி:
இந்தியாவில் கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த பருவமழை இதுவரை இயல்பை விட 7 சதவீதம் அதிகம் பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அந்தவகையில் இயல்பான அளவான 418.9 மி.மீ.யை விட அதிகமாக 447.8 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
அதேநேரம் இது பல்வேறு பிராந்தியங்களுக்கு இடையே மிகப்பெரிய மாறுபாடுகளை கொண்டுள்ளது.
அந்தவகையில் ராஜஸ்தான், லடாக், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் சிக்கிம் மாநிலங்கள் மிக அதிக மழை பெற்றுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் 384.7 மி.மீ. (இயல்பான அளவு 200.4 மி.மீ.) மழை பெய்திருக்கிறது. இதைப்போல லடாக் 30 மி.மீ. மழை (10.7 மி.மீ.) பெற்றிருக்கிறது.
மேலும் மத்திய பிரதேசம், குஜராத், தாத்ரா-நாகர் ஹவேலி, டையூ-டாமன், ஜார்கண்ட் மற்றும் அசாம் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 20 முதல் 59 சதவீதம் வரை அதிக மழை பெற்றுள்ளன.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இயல்பான மழை அளவை 19 சதவீத சராசரியில் பெற்றிருக்கின்றன.
அதேநேரம் அருணாசல பிரதேசம், அசாம், பீகார், டெல்லி, மகாராஷ்டிரா, லட்சத்தீவுகள் போன்றவை 20 முதல் 59 சதவீதம் வரை குறைவான மழைப்பொழிவை பெற்று இருக்கின்றன.
இந்த தகவல்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.
- சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
- தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, தேனி, தென்காசி, கோவை, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இன்று முதல் 1-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
29-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் 1-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது.
- சென்னையில் சில இடங்களில் நேற்று மழை பெய்தது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வருகிற 28-ந் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளை தவிர பிற பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.
அதிலும் சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை காலத்தில்கூட இந்த அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இல்லாத நிலையில், இம்மாதம் தொடக்கத்தில் இருந்து கொளுத்துகிறது. இடையில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்து ஓரளவுக்கு வெப்பத்தை குறைக்கிறது.
அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக சென்னையில் வெப்பத்தின் அளவு இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. பகலில் உஷ்ணத்தால் அசவுகரியத்தை உணர முடிந்தது. நேற்று அதற்கு ஒரு இடைவெளி கொடுக்கும் வகையில் இரவில் சென்னையில் சில இடங்களில் மழை பெய்தது. அதிலும், இடி, மின்னல், காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக சுட்டெரித்த வெயிலுக்கு மத்தியில் இதமான சூழலை மழை ஏற்படுத்தியதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- சென்னையில் கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது.
- மதுரையில் இயல்பைவிட 3 டிகிரி வரையில் வெப்பம் உயர்ந்து காணப்பட்டது.
சென்னை:
தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதிலும் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெயிலின் தாக்கம் உயரும் என சொல்லப்பட்டது.
அதன்படி, மதுரை விமான நிலையம் 104.36 டிகிரி (40.2 செல்சியஸ்), மதுரை நகரம் 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்), கடலூர் 100.93 டிகிரி (38.3 செல்சியஸ்), பரங்கிப்பேட்டை 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்), திருச்சி 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்), சென்னை மீனம்பாக்கம் 100.22 டிகிரி (37.9 செல்சியஸ்), ஈரோடு 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்) ஆகிய 7 இடங்களில் வெயில் சதம் அடித்து இருந்தது. இதில் மதுரையில் இயல்பைவிட 3 டிகிரி வரையில் வெப்பம் உயர்ந்து காணப்பட்டது.
சென்னையில் கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. கடல் காற்று நிலப்பகுதிக்குள் வராத காரணத்தினால் இந்த நிலை இருந்தது. ஆனால் நேற்று கடல் காற்று ஓரளவுக்கு வந்ததால், வெப்பம் சற்று குறைந்ததை உணர முடிந்தது.
வருகிற 25-ந்தேதி வரை இதே நிலைதான் நீடிக்கும் என்றும், அதன் பிறகு பகலில் வெப்பமும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையையும் தமிழ்நாட்டில் சில இடங்களில் எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
- மேற்கு காற்று வலுவடைந்திருப்பதால், கடல் காற்று உள்ளே நுழைவதில் தாமதம் ஏற்படுகிறது.
- நேற்று சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையத்தில் 101.84 டிகிரி வெயில் பதிவானது.
சென்னை:
தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், தற்போது பருவமழை குஜராத் உள்ளிட்ட சில பகுதிகளில் தீவிரம் அடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு இருந்தாலும், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கு காற்று வலுவடைந்திருப்பதால், கடல் காற்று உள்ளே நுழைவதில் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அதிலும் இன்று (வியாழக்கிழமை) இயல்பைவிட 2 டிகிரி வரை வெப்பம் உயரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் நேற்று சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையத்தில் 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்) வெயில் பதிவானது.
இதன் தொடர்ச்சியாக வரும் நாட்களிலும் பகலில் வெயில், மாலை அல்லது இரவு நேரங்களில் வெப்பச்சலனத்தால் மழை என்ற சூழ்நிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இம்மாதம் நிறைவு பெறும் வரையில் இதே வானிலை தான் நிகழக்கூடும்.






