search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொச்சி விமான நிலையம்"

    • ஒரு பெண் பயணி, கிரீன் சேனல் வழியாக செல்ல முயன்றார்.
    • பெண் மீது சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    துபாயில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கொச்சி நெடும்பச்சேரி விமான நிலையத்தில் துபாய் விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது ஒரு பெண் பயணி, கிரீன் சேனல் வழியாக செல்ல முயன்றார். அவர் மீது சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரது உடலில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண், சானிட்டரி நாப்கினுக்குள் வைத்திருந்த 679 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.29 லட்சம் ஆகும். சானிட்டரி நாப்கினுக்குள் மறைத்துவைத்து தங்கத்தை கடத்தி வந்த அந்த பெண் திருப்பூரை சேர்ந்தவர் ஆவார். அவரை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லங்கையில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்ததாக இலங்கை தம்பதியை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கொச்சி விமான நிலையத்திற்கு இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் கண்காணித்தனர். இதில் அந்த விமானத்தில் வந்த இலங்கையை சேர்ந்த தம்பதி முகமது சுபைர் மற்றும் முகமது ஜனுபர் ஆகியோர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. அவர்கள் இருவரையும் தனியாக அழைத்து சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது அவர்களின் உடலில் கேப்ஸ்யூல்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் சுமார் 1202.55 கிராம் தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதன் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்ததாக இலங்கை தம்பதி முகமது சுபைர், முகமது ஜனுபர் இருவரையும் கைது செய்தனர்.

    • கொச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கடத்தி வந்த பயணியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    குவைத்தில் இருந்து கேரளா வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது குவைத்தில் இருந்து கொச்சிக்கு வந்த விமானத்தில் வந்த பயணி ஒருவரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த பயணியின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரிடம் 1978.89 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.85 லட்சம் ஆகும்.

    கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கடத்தி வந்த பயணியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கேரளாவின் கொச்சிக்கு வந்த விமானத்தில் 222 பயணிகள் இருந்தனர்.
    • கொச்சியை நெருங்கியபோது திடீரென விமானத்தின் ஹைட்ராலிக் எந்திரங்கள் செயல்படவில்லை

    திருவனந்தபுரம்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேற்று மாலை ஏர் அரேபியா விமானம் ஒன்று கேரளாவின் கொச்சிக்கு புறப்பட்டது.

    இந்த விமானத்தில் 222 பயணிகள் இருந்தனர்.விமானி உள்பட 7 ஊழியர்களும் இருந்தனர். விமானம் கொச்சி விமான நிலையத்தில் நேற்றிரவு 7.13 மணிக்கு தரை இறங்க வேண்டும்.

    விமானம் கொச்சியை நெருங்கிய போது திடீரென விமானத்தின் ஹைட்ராலிக் எந்திரங்கள் செயல்படவில்லை. இதை அறிந்த விமானி உடனே கொச்சி விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    நடுவானில் விமானம் பழுதானதை தொடர்ந்து கொச்சி விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. ஓடு பாதையில் இருந்த விமானங்கள் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    மேலும் அவசர பாதுகாப்பு எந்திரங்கள் உதவியுடன் விமானத்தின் பழுதை சரிசெய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

    இதையடுத்து விமானம் 16 நிமிடங்கள் தாமதாமாக 7.29 மணிக்கு கொச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது. இது பற்றி பயணிகள் கூறும்போது, விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் பத்திரமாக தரை இறங்கியதாக தெரிவித்தனர்.

    விமானம் தரை இறங்கிய பின்பு விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலை வாபஸ் பெறப்பட்டது. அதன்பின்பு மற்ற விமானங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.

    கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் வெள்ள நீர் சூழ்ந்திருந்த நிலையில், தற்போது 15 நாட்களுக்கு பின்னர் இன்று விமானங்கள் இயக்கப்பட உள்ளன. #KeralaFloods #KochiAirport
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 1924-ம் ஆண்டுக்குப் பிறகு கேரளத்தை தாக்கிய இந்த வெள்ளப்பேரிடரால் சுமார் 370 பேர் தங்கள் உயிரை இழந்தனர். 80,000 பேர் காப்பாற்றப்பட்டனர். 5,645 நிவாரண முகாம்களில் சுமார் 2,23,000 பேர் தங்கவைக்கப்பட்டனர். மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

    மேலும் 200 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. 80,000 கிலோ மீட்டர் அளவுக்கான சாலைகள் பாதிக்கப்பட்டது. இடுக்கி மற்றும் வயநாடு பகுதிகளில் உள்ள சாலைகள் மிகக் கடுமையாக சேதமடைந்தன.

    இடுக்கி, முல்லை பெரியாறு அணைகள் திறக்கப்பட்டதாலும், கனமழையினாலும் தண்ணீர் தேங்கியதால் கொச்சின் விமான நிலையம் 15 நாட்களாக மூடப்பட்டிருந்தது. இதனால் ரூ.220 கோடி அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 
    மேலும் கொச்சின் வரும் விமானங்கள் திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் கோயமுத்தூர் போன்ற வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. விமான ஓடு பாதை, விமான நிலையத்தில் உள்ள கடைகள், டாக்ஸிகள் நிறுத்துமிடம் போன்றவையும் பாதிக்கப்பட்டன.

    இந்த பாதிப்புகளால் மக்களின் அன்றாடம் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், மாநில வருவாயில் 10 சதவீதம் பங்களிக்கும் சுற்றுலா துறையிலும் இவை பாதிப்பை ஏற்படுத்தின. மேலும் சாலை, விமானம் என 2 வகை போக்குவரத்துகள் முடங்கிய நிலையில் வர்த்தகக் கூட்டங்கள், மாநாடுகள் நடைபெறுவதிலும் சிக்கல்கள் எழுந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 20 முதல் வர்த்தக விமானங்கள் மட்டும் செயல்பட துவங்கியது.

    இந்நிலையில் 15 நாட்களாக மூடப்பட்டிருந்த கொச்சி விமான நிலையம், பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இன்று திறக்கப்பட உள்ளது. பிற்பகலில் முதல் விமானம் தரையிறங்க உள்ளது. 
    கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கொழும்புக்கு இன்று புறப்பட்ட விமானம் ஓடுதள விளக்கில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானத்தின் சக்கரம் பலத்த சேதமடைந்தது. #SrilankanAirlines
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியிலிருந்து இலங்கை கொழும்புக்கு 227 பயணிகளுடன் இன்று மாலை ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானம் கிளம்பியது. ஓடுதளத்தில் இருந்து விமானம் மேலே எழும்பும் போது விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தின் எல்லையில் இருக்கும் விளக்கில் பயங்கரமாக மோதியது.

    இதனை அடுத்து, விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது. பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு ஓடுதளம் மூடப்பட்டு, பின்னர் நிலைமை சீரானதும் திறக்கப்பட்டது. இந்த விபத்தில் விமானத்தின் சக்கரம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    ×