search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி- ராகுல் காந்தி
    X
    சோனியா காந்தி- ராகுல் காந்தி

    காங்கிரஸ் புதிய தலைவர் தேர்வு- சோனியா, ராகுல் காந்தி ஆலோசனையில் பங்கேற்கவில்லை

    காங்கிரஸ் புதிய தலைவரை தேர்வு செய்யும் நடைமுறையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. அவர்கள் இருவரும் ஆலோசனையில் கலந்து கொள்ளாமல் செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு புறப்பட்டு சென்றனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 400 தொகுதிகளில் படு தோல்வியை தழுவியது.

    இதைத் தொடர்ந்து மே மாதம் 25-ந்தேதி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் ராஜினாமா செய்தார். தனக்கு பதில் புதிய தலைவரை தேர்வு செய்து கொள்ளும்படி அறிவித்தார். ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இதை ஏற்கவில்லை.

    ராகுல்காந்தியை சமரசம் செய்து வந்தனர். ஆனால் ராஜினாமாவை திரும்ப பெற ராகுல் திட்டவட்டமாக மறுத்து விட்டார். பிரியங்காவை புதிய தலைவராக்க முயற்சி நடந்தபோதும் அதையும் ராகுல் தடுத்து நிறுத்தினார்.

    இதனால் கடந்த 77 நாட்களாக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி இல்லாமல் தள்ளாடியபடி உள்ளது. 134 ஆண்டுகள் பாரம்பரிய சிறப்பு கொண்ட காங்கிரஸ் கட்சி இதுவரை இத்தகைய பரிதாப சோதனையை சந்தித்தது இல்லை.

    இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாக பணிகள் தேக்கம் அடைந்தன. இதற்கு முடிவு கட்டுவதற்காக டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது.

    காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

    காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் 65 பேர் மற்றும் மாநில தலைவர்கள், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு காங்கிரஸ் புதிய தலைவரை தேர்வு செய்யும் நடைமுறையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.

    அவர்கள் இருவரும் ஆலோசனையில் கலந்து கொள்ளாமல் செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு புறப்பட்டு சென்றனர். காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யும் நடைமுறையில் நானும், ராகுல் காந்தியும் கலந்து கொள்ள மாட்டோம் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.

    செயற்குழு கூட்டத்துக்கு பிறகு மாநில காங். தலைவர்களின் கூட்டம் நடைபெற்று வருகிறது. 5 மண்டலங்களின் நிர்வாகிகள் அதில் பங்கேற்று புதிய தலைவரை தேர்வு செய்கிறார்கள்.

    காங்கிரஸ் புதிய தலைவராக முகுல்வாஸ்னிக் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 59 வயதாகும் இவர் தலித் இனத்தைச் சேர்ந்தவர்.

    இதே போன்று தலித் இனத்தைச் சேர்ந்த சுஷில் குமார் ஷிண்டே, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பெயர்களும் தலைவர் பதவிக்கு அடிபடுகிறது.

    Next Story
    ×