search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்ட காட்சி
    X
    எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்ட காட்சி

    டிரம்ப் சர்ச்சை பேச்சு- பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி

    காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டிரம்ப் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
    புதுடெல்லி:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தபோது, காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யும்படி இந்திய பிரதமர் மோடி கேட்டதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

    “இரண்டு வாரங்களுக்கு முன் ஜப்பானில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்தபோது காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய விருப்பமா? என்று கேட்டார். அப்போது இந்தியாவும் பாகிஸ்தானும் கேட்டுக்கொண்டால் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக கூறினேன்” என டிரம்ப் குறிப்பிட்டார். 

    ஆனால் அப்படி எந்த கோரிக்கையையும் டிரம்பிடம் பிரதமர் மோடி வைக்கவில்லை என இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

    இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

    இதேபோல் மாநிலங்களவையிலும் இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

    முன்னதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசும்போது, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் தேசிய நலன் ஆகியவை சம்பந்தப்பட்டது என்பதால், இந்த விவகாரம் தொடர்பாக நாம் ஒருமித்த கருத்தை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

    வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

    டிரம்ப் பேசியது குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும்படி பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் எந்த கோரிக்கையையும் வைக்க வில்லை என உறுதி அளித்தார். 

    மேலும், சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனம் ஆகியவை, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அனைத்து பிரச்சினைகளையும் இரு நாடுகளும் பேசி திர்ப்பதற்கான அடிப்படையை வழங்குவதாகவும் வெளியுறவுத்துறை மந்திரி குறிப்பிட்டார்.
    Next Story
    ×