search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்: அகமதாபாத் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
    X

    குஜராத்: அகமதாபாத் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    குஜராத்தில் இருக்கும் அகமதாபாத் ரெயில் நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    அகமதாபாத்:

    குஜராத்தில் இருக்கும் அகமதாபாத் ரெயில் நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 9 மற்றும் 14-ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதன்காரணமாக பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அங்கு முகாமிட்டு இருக்கின்றனர்.

    இந்த நிலையில் தற்போது அகமதாபாத் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்திற்கு கடிதம் மூலம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மிரட்டல் கடிதம் போலியானது என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது அங்கு போலீசாரும், வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் நிபுணர்களும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அங்கு போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேடுதல் வேட்டையில் பல மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
    Next Story
    ×