என் மலர்
நீங்கள் தேடியது "வெடிகுண்டு மிரட்டல்"
- திருப்பரங்குன்றம் மலையின் மீது சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது.
- இந்துத்துவ அமைப்பினர் பிரச்சனை செய்ய தொடங்கியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் முருகன் கோயிலும், மலையின் மீது காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது. தர்காவும், கோயிலும் அருகருகே அமைந்துள்ளதை வைத்து இந்துத்துவ அமைப்பினர் பிரச்சனை செய்ய தொடங்கியுள்ளனர்.
அதிலும் சமீபத்தில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். ஜிவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு இன்னும் பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. அவரை இம்பீச்மெண்ட் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தீர்மான கடிதமும் வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது புரளி என்று தெரியவந்தது.
இந்நிலையில், மீண்டும் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தர்காவில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் போலி என்று தெரிய வந்தது
- மலையின் மீது காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது.
- திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதி பள்ளிவாசலிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை
திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் முருகன் கோயிலும், மலையின் மீது காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது. தர்காவும், கோயிலும் அருகருகே அமைந்துள்ளதை வைத்து ஒரு பெரும் அரசியலே தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
அதிலும் சமீபத்தில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். ஜிவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு இன்னும் பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. அவரை இம்பீச்மெண்ட் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தீர்மான கடிதமும் வழங்கியுள்ளனர்.
இப்படி ஒரு பெரும் சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில், இதனை இன்னும் பரபரப்பாக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலை தொடர்ந்து சிக்கந்தர் தர்காவில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். மேலும் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதி பள்ளிவாசலிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
- கண்ணூர், பிராங்பேர்ட் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் இருந்து ஐதராபாத் வந்த விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக இ-மெயில் வந்தது.
- வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் மோப்பநாய் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விமானங்களில் படிப்படியாக சோதனைகளைத் நடத்தினர்.
திருப்பதி:
ஐதராபாத் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் 3 சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்ணூர், பிராங்பேர்ட் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் இருந்து ஐதராபாத் வந்த விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக இ-மெயில் வந்ததை அடுத்து அதிகாரிகள் உடனடியாக எச்சரிக்கப்பட்டனர்.
3 விமானங்களும் ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கிய வுடன், அதிகாரிகள் அவசர சோதனைகளை மேற்கொண்டனர்.
வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் மோப்பநாய் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விமானங்களில் படிப்படியாக சோதனைகளைத் நடத்தினர்.
பயணிகளின் பொருட்கள், கேபின் பைகள் மற்றும் சரக்கு பெட்டிகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன.
மேலும், இந்த மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து சைபர் கிரைம் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
- பிரதமரின் கோவை சுற்றுப்பயணத்தில் குண்டுவெடிப்பு நடத்த உள்ளோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
- கோவையில் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் இன்று இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தநிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பணிக்கு வந்த ஊழியர்கள் இன்று காலை இ-மெயில் தகவல்களை சரிபார்த்தனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிரதமரின் கோவை சுற்றுப்பயணத்தில் குண்டுவெடிப்பு நடத்த உள்ளோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகம் மற்றும் விமான நிலையத்தில் மோப்பநாய் கொண்டு சல்லடை போட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. அதன்பிறகே போலீசாரும், ஊழியர்களும் நிம்மதி அடைந்தனர். இருந்தாலும் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- கலெக்டர் மணிஷ் நாரணவரே, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு தகவல் அளித்தார்.
- அலுவலக அறைகள், கழிவறைகள், வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இது 7 தளங்களை கொண்டது. கலெக்டர், வருவாய் அலுவலர் உள்பட அதிகாரிகளின் அலுவல் அறைகள் மற்றும் பல்வேறு துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாவட்ட கலெக்டரின் அதிகாரபூர்வ மின்னஞ்சலுக்கு, அறிமுகம் இல்லாத முகவரியில் இருந்து இன்று காலை ஒரு மெயில் வந்துள்ளது. அதில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து கலெக்டர் மணிஷ் நாரணவரே, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து மாநகர நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் வெடிகுண்டை கண்டறியும் போலீசார் குழு மோப்பநாய், புல்லட் உதவியுடன் கலெக்டர் அலுவலகத்தின் பல்வேறு தளங்களிலும் ஆய்வு செய்தனர்.
கலெக்டர் அலுவலகத்தின் 7 தளங்களிலும் உள்ள அலுவலக அறைகள், கழிவறைகள் மற்றும் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. மேலும் மின்னஞ்சல் அனுப்பிய முகவரி தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை வெடிகுண்டு செயல் இழக்கும் நிபுணர்கள் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை செய்த சம்பவம் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களால் நடத்தப்படும் சோதனையில் அது புரளி என்பது தெரியவருகிறது.
- வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களால் நடத்தப்படும் சோதனையில் அது புரளி என்பது தெரியவருகிறது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் அஜித், அரவிந்த்சாமி, லிவிங்ஸ்டன், நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் முருகதாஸ் ஆகியோர் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், காவல்துறையினர் சோதனை நடத்தினர். சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்த நிலையில், மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
- மோப்பநாய் ரூபியையும் அழைத்துச் சென்று மெட்டல்டிடெக்டர் உள்ளிட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஏற்கனவே 3 முறை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த நிலையில் மீண்டும் இன்று கலெக்டர் அலுவலக மெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலமாக விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அந்த மெயிலில் மதியம் ஒரு மணிக்கு குண்டு வெடித்து சிதறும் என கூறப்பட்டுள்ளது. இதனை பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் மோப்பநாய் ரூபியையும் அழைத்துச் சென்று மெட்டல்டிடெக்டர் உள்ளிட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
ஆனாலும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் வழக்கம் போல பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே 3 முறை கலெக்டர் அலுவலகத்திற்கு மிரட்டல் விடுத்த நிலையில் மீண்டும் தற்போது கலெக்டர் அலுவலகத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் மிரட்டல் விடுப்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது கலெக்டர் அலுவலக ஊழியர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
- ஒரு மணி நேரம் சோதனை நடந்த நிலையில், வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.
- பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை:
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஏற்கனவே 7 முறை இ-மெயில் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பி இருந்தான்.
அப்போது வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கலெக்டர் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால் அந்த மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.
இந்த நிலையில் இன்று காலை கலெக்டர் அலுவலகம் வழக்கம்போல் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் மும்முரமாக பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலக முகவரிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து கலெக்டர் அலுவலக ஊழியர், கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு செயல் இழப்பு பிரிவு போலீசார், மோப்பநாய் அயன் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அனைத்து அறைகளிலும் சல்லடை போட்டு தேடினர்.
ஒரு மணி நேரம் சோதனை நடந்த நிலையில், வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. எனவே மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் புரளிய என்பது தெரியவந்தது.
இதையடுத்து கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இ-மெயில் வந்த முகவரியை வைத்து அவர் யார்? எங்கிருந்து வந்தது? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அடிக்கடி மிரட்டல் வருவதால், போலீஸ் சோதனை நடத்துவதும் ஊழியர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பணிகளும் பாதிக்கப்படுவதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
- வெடிகுண்டு நிபுணர்கள் 4 பள்ளிகளிலும் ஒவ்வொரு அறைகளாக சோதனை செய்தனர்.
- வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்று தெரியவில்லை.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் புல்லர்னில் உள்ள 4 பள்ளிகளுக்கு தொடர் வெடி குண்டு மிரட்டல்கள் வந்தது.
அங்குள்ள சன்னிஹில் பள்ளி, யூனியன் பள்ளி, டிராய் மற்றும் பெர்ன் டிரைவ் பள்ளிகளுக்கு தொலைபேசி மூலம் பள்ளியில் குண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து அந்த பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டு யாரும் உள்ளே செல்லாமல் இருக்க பூட்டப்பட்டது.
பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் 4 பள்ளிகளிலும் ஒவ்வொரு அறைகளாக சோதனை செய்தனர். இறுதியில் அது வெறும் புரளி என தெரியவந்தது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்று தெரியவில்லை. இந்த சம்பங்களால் புல்லர்டன் பகுதி பரபரப்பாக காணப் பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பீதி நிலவியது.
- பிரியா பவானி சங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.
- மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரைப் பிரபலங்கள் பலரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினகாந்த், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகைகளான பிரியா பவானி சங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் அவரது மகள் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
- சோதனை முடிவில் இது வெறும் புரளி என தெரிய வந்தது.
திருச்சி:
தமிழக காவல்துறை இயக்குனர் அலுவலக மின்னஞ்சலுக்கு இன்று காலை ஒரு மெயில் வந்தது.
அதில் திருச்சியில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு வீடு, அலுவலகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடு, அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
உடனே திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநகர காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் தில்லைநகர் 5-வது கிராஸில் உள்ள அமைச்சர் கே .என்.நேரு வீடு மற்றும் சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.
இதேபோன்று தென்னூர் அண்ணா நகரில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடு மற்றும் சத்திரம் வி என் நகர் பகுதியில் அமைந்துள்ள திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனை முடிவில் இது வெறும் புரளி என தெரிய வந்தது.
அமைச்சர்கள் மட்டுமல்லாமல் திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் கல்லூரி அலுவலக அறைகள் வகுப்பறைகள் ஆய்வறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சல்லடை போட்டு தேடினர். ஆனால் அங்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
அமைச்சர்கள் வீடு மற்றும் அலுவலகம் தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நடிகர் அருண் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அருண் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபர் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதைதொடர்ந்து, வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் நடிகர் அருண் விஜய் வீட்டில் சோதனை செய்தனர்.






