என் மலர்

  செய்திகள்

  ஜம்மு-காஷ்மீர்: என்கவுண்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
  X

  ஜம்மு-காஷ்மீர்: என்கவுண்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
  ஸ்ரீநகர்:

  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் உல்ள ரபியபாத் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 

  சோபூர் நகரின் பழல்போரா கிராமத்தின் உள்ள வீடு ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நேற்று முதலே இந்த தேடுதல் பணியை மேற்கொண்டனர். 

  அப்போது, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தீவிரவாதிகளை தேடும் பணி நீடித்து வருவதாக இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், நேற்று இரவு மட்டும் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. தீவிரவாதிகள் தப்பிக்காமல் இருப்பதற்காக தற்போது தேடுதல் பணிகள் நீடித்து வருகிறது என்றார்.

  தீவிரவாதிகள் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பித்த பிறகே பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர் என்று தெரிவித்தார்.
  Next Story
  ×